Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அவர்கள் அவர்களாகவே....
#2
sharish Wrote:[size=18]<b>அவர்கள்
அவர்களாகவே....</b>

குளிர்மயமான அதிகாலை
அலாரத்தின் மணிச்சத்தம்
காதுகளை வந்தடைய
கண்திறக்காமல்
கைகளால் தடவியபடி அலாரத்தை
நிறுத்திவிட்டு...
எழுந்திருக்க மனமின்றி
ஒரு நிமிடம்
மறுபடியும் உறங்கிவிட்டு....
அ......ய்.....யோ.....
நேரமாச்சென்று அலறிக்கொண்டொழும்பி
அவசரமாய் தயாராகி
தொடரூந்து நிலையம்வரை
ஓட்டமும் நடையுமாகப் பறக்கின்றேன்...!

அங்கு...
அலைமோதும் பயணிகள் கூட்டம்
என்னைப்போலவே
எல்லோருமே அவசரங்களாய்...
எல்லோருமே என்னைப்போல்
அதிகாலை அலாரமணியோசையோடு
உறங்கிவிட்டு வருகிறார்களா...?

;அத்தனை அவசரங்களுக்கு மத்தியில்
வளமைபோல...
ஒரு தெருப்பாடகன்
ஒரு பிச்சைக்காரன்
ஒரு காதலி
இவர்களோடு நான்

பாடகன்...
தன்கையில் இருந்த புல்லாங்குழல்கொண்டு
தொடரூந்து நிலையத்தில்
எங்கோ......
ஒரு மூலையில் இருந்துகொண்டே
நாலாபுறமும்...
இசையைப்பரப்பிக்கொண்டிருக்கிறான்...!

பிச்சைக்காரன்
ஒவ்வொருவர் முன்சென்று
ஒரு \"யுரோ\" கிடைக்குமா....?
என...
பிச்சை கேட்டுக்கொணடிருக்கிறான்...!

காதலி...
காதலனுக்காக காத்திருக்கிறாள்..!
அவசரப்பயணிகள்
தொடரூந்துக்காக காத்திருக்கின்றனர்...!
அதோ...
தொடரூந்து வருகிறது....
நான் அதில்
ஏறும்போது பார்கிறேன்
இறங்கிச்செல்லும் அவனை...!

தொடரூந்து
மீண்டும் புறப்படும்வரை...
கட்டியணைத்தபடி ஒட்டிய உதடுபிரியாது...!
வெள்ளைக்குயில்களின்
காலைமுத்தச்சத்தம்கலந்த புல்லாங்குழலோசை-என்
காதுகளுக்கு ஆறுதலாக வந்தடைய...
தினமும்.....
அவசரமாகவே செல்கின்றேன்..!

ஒரு நாள்...
வளமைபோல
பிச்சைக்காரன் ஒவ்வொருவர் முன்சென்று
பிச்சை கேட்டுக்கொணடிருக்கிறான்...!
எங்கள் தொடரூந்து வருகிறது
வளமைபோலவே
அதில் அவசரமாக ஏறிச்செல்கிறேன்
அவன் இறங்கிச்செல்லவில்லை...!!!
பாவம் காதலி
அவனுக்காகக் காத்திருக்கின்றாள்
காதலன் வரவே இல்லை..!
அதோ.....
அந்த மூலையில் இருந்து
புல்லாங்குழல் ஓசைமட்டும்
காற்றிலே கலந்து...
வந்துகொண்டே இருக்கிறது...!!!

<b>த.சரீஷ்
10.02.2004 (பாரீஸ்)</b>
Reply


Messages In This Thread
Re: அவர்கள் அவர்களாகவே.... - by poorukki - 02-15-2004, 08:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)