Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வவுனியாவில் தாக்குதல் 4 ராணுவம் பலி
#2
புதினத்தில் வந்த செய்தி

[size=18]வவுனியா கிளைமோர் தாக்குதலில் 4 படையினர் பலி- 11 பேர் படுகாயம்
[திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2006, 10:54 ஈழம்] [ம.சேரமான்]
வவுனியாவில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கிளைமோர் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தினர் 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


வேப்பங்குளம் வவுனியா-மன்னார் வீதியில் முச்சக்கர வாகனம் ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த கிளைமோர் கண்ணிவெடியில் சிறிலங்கா படைத்தரப்பு வாகனம் இன்று திங்கட்கிழமை காலை 8.50 மணியளவில் சிக்கியது.

இச்சம்பவத்தில் 4 படையினர் கொல்லப்பட்டனர். 10 படையினரும் ஒரு பொதுமகனும் படுகாயமடைந்தனர்.

இக்கிளைமோர் தாக்குதலையடுத்து அப்பகுதியில் சுமார் 10 நிமிடத்துக்கும் மேலாக படைத்தரப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அனைத்து வீதிகளும் மூடப்பட்டன.

படுகாயமடைந்த நாகராஜா (வயது 35) என்கிற பொதுமகன் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலில் படுகாயமடைந்த படையினர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கொழும்பு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

வவுனியா மருத்துவமனையின் பாதுகாவலர் தயாரூபனை அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாக சிறிலங்கா படைத்தரப்பினர் கைது செய்துள்ளதாகவும் வவுனியா செய்திகள் தெரிவிக்கின்றன.
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by கந்தப்பு - 04-17-2006, 06:02 AM
[No subject] - by Vaanampaadi - 04-17-2006, 06:07 AM
[No subject] - by Vaanampaadi - 04-17-2006, 06:11 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)