04-17-2006, 05:01 AM
இந்த படத்தை பார்க்கும் பல கேள்விகள் எழுகின்றது. முதலில் போக்குவரத்து குற்றங்களை கண்டுபிடிப்பதற்து தனியாக பொலீஸ் பிரிவு உள்ளதென்று தான் எண்ணத் தோன்றுகிறது. முதலில் படத்திலுள்ள ஜீப்பில் காவல்துறையினர் பிரயாணித்து வீதி ஒழுங்குகளை நடைமுறைப்படுத்துகிறார்கள் என்பது நடக்காத விடயம். அப்படி செய்ய புலிகளிடம் போதுமானளவு வாகனங்களோ அல்லது தேவையோ இல்லை. போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பொலீசார் அதிகம் மோட்டார் சைக்கிளில் தான் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள் என்று நினைக்கிறேன். அப்படியாயின் அந்த வாகனத்தில் செல்லும் பொலீசார் வேறொரு தேவைக்காக செல்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் இவர்களை மறித்து தண்டிப்பார்கள் என்று எண்ண முடியாது. அத்துடன் அந்த வாகனத்தில் பின்னுக்கு நான்கு போலீசார் ஆயுதங்களுடன் இருக்கின்றனர். அவர்கள் என்ன தேவைக்காக செல்கிறார்களோ தெரியாது. அப்படியாயின் வீதிக்கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தும் காவல்துறைக்கு ஆயதம் எதற்கு.
இன்னுமொன்று படம் எடுத்த காலப்பகுதியையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இந்த படத்தை யுத்த நிறுத்த காலப்பகுதிக்கு முன்பு எடுத்திருந்தால் அப்போது தலைக்கவசம் அணிய வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் அப்போது அதிகளவு வாகன நெருக்கடி வன்னியில் இல்லை. தற்போது தான் வன்னியில் அதிகளவு வாகனவிபத்து ஏற்படுகின்றது. அதனால் தான் வேகக்கட்டுப்பாட்டை கடுமையாக அமுல் படுத்துகிறார்கள். யுத்த காலத்தில் பொது மக்கள் எவரும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிள் செலுத்தியதை நான் பார்க்கவில்லை.
இறுதியாக எனக்கு இந்த படத்தை பார்த்தபோது எவ்வித ஆச்சரியமோ அல்லது ஒன்றுமே புரியாமலோ போகவில்லை.
அப்படி ஏற்படுவதற்கு இந்த படத்தில் எதுவித காட்சிகளும் இல்லை.