Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நாவண்ணன் ஐயாவுக்கு அஞ்சலி!
#1
<b>

ஒரு கவியை கவி கொண்டு பாட........
மனசு வரிகளுக்காய் ..........
வரண்ட வயலாய் ...இன்னும்
சிந்தனைக்கு ஏதும் வராது
சிறு மெளனம்.....கொள்கிறது!

ஐயா........எல்லா கவிஞனும்.........
எழுது கோலுக்கு நிறநீர் மட்டுமே.........
நிரப்புவான்........நீரோ.........
உயிர் உம்மோடு இருந்தவரை.........
கண்ணீர் பாதி செந்நீர் பாதி கொண்டே......
இந்த கைவிடபட்ட இனத்துக்காய்..........
எழுத்தால் போர் செய்து காலமானீர்!

என்ன சொல்லி உம்மை பாட?
நரைத்த தலை தாடி உம்முருவம்........
அதனுள் நரை விழாத விடுதலை உணர்வு.......

இது-இளமை கொண்டவர்கூட ........
எட்டப்பராய் திரியும் காலம்........

முதுமையின் சாயல் முகத்தில் விழுந்தும்.....
கடைசிவரை எம் தேச தாகம் தீர்க்க.......
கவிநீர் தந்த பெருங்கவியே.........
சென்று வாரும்....... இந்த செங்கொடி-தேசம்
என்றும் உம் புகழ் பாடும்!</b>
-!
!
Reply


Messages In This Thread
நாவண்ணன் ஐயாவுக்கு அஞ்சலி! - by வர்ணன் - 04-17-2006, 02:42 AM
[No subject] - by கந்தப்பு - 04-17-2006, 03:20 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)