04-17-2006, 02:16 AM
உவர் நிதர்சன்,
மக்கள் மேல சட்டங்களைத் திணிக்க அவை விரும்பிறேல எண்டுறார். சட்டமெண்டா திணக்கத்தான் வேணும். நீங்களே உணர்ந்து செய்யுங்கோ எண்டா, காவல்துறையோ அரசோ கூட தேவையில்லை. உது கால்மாக்சின்ர பொதுவுடமைக் கற்பனை வரை போகும்.
இதவிட முக்கியம் குறைஞ்ச தமிழ் இலக்கத்தகட்டுக்கு பத்துவருசத்துக்கும் மேல இறுக்கு இறுக்கெண்டு கட்டாயப்படுத்திப்போட்டு (நான் முழு மனத்தோடு இந்தக் கட்டாயத்தை ஏற்கிறேன்) தலைக்கசவப்பிரச்சினைக்கு மட்டும் திணக்க வெளிக்கிடேல எண்டு வரிஞ்சு கட்டிக்கொண்டு வர என்ன தேவைகிடக்கு?
மன்னார் பண்டிவிரிச்சானுக்குள்ளால போக்குவரத்து நடந்த காலத்தில நான் அங்க நிண்டன். அப்ப அரசபகுதியிலயிருந்து வாற சாமான் லொறியெல்லாம் புலிகளின்ர சோதனை, வரிஅறவீட்டு நிலையத்துக்கு வரமுதல் தமிழ் இலக்கத்தகடு மாத்திப்போட வேணும். மாத்தாட்டி தண்டம். அவனின்ர பொயின்ற் கடக்குமட்டும் அரச இலக்கத்தகட்டைக் கழட்ட ஏலாது.
இப்பிடி உன்னிப்பா (முட்டையில மயிர் புடுங்கிறதெண்டு இதையும் சொல்லலாம்) இலக்கத்தகட்டு முறைய நடைமுறைப்பபடுத்திற நிர்வாகம் இருக்கிற வன்னியிலதான் தலைக்கவசத்துக்கு உந்த பேக்கதையள் கதைக்கவேண்டிக்கிடக்கு.
(திரும்பவும் சொல்லிறன், உந்த இறுக்கமான நடைமுறைகளை நான் நிபந்தனையற்று ஆதரிக்கிறன்)
இன்னும் இறுக்கமான நடைமுறை எண்டு பாக்கிறதெண்டா புலிகளின்ர வரிவிதிப்புக்களைப்பற்றியும் தாராளமாக் கதைக்கலாம்.