04-17-2006, 02:08 AM
உவ வெண்ணிலாவின்ர கதை பெரிய பம்பல். "என்னத்துக்கு வாகன இலக்கத்தகடு?" எண்டு கேட்டு தந்தாவே ஒரு விளக்கம்.
தங்கச்சி, அப்ப என்ன கோதாரிக்கு இலக்கத்தகட்டைப் போடச்சொல்லி சனத்தை கழுத்தை நெருக்குப்படுது? இலக்கத் தகடில்லாட்டி நூற்றுக்கணக்கில தண்டம் வேண்டுப்படுது? மற்ற எந்தப்பகுதியையும்விட புலிகளின்ர பகுதிக்குள்ளதான் இலக்கத்தகட்டுக்கான இறுக்கமும் தண்டமும் அதிகம் தெரியுமோ? காவல்துறைக்கு வக்காலத்து வாங்க வந்து எதிர்மறையா ஒரு போடுபோட்டுப் போறியள்.
வாகன இலக்கத்தகட்டை வச்சு வாகன எண்ணக்கை தெரியுமெண்டதுக்காக அதைக் கழட்டிப்போட்டு படமெடுத்ததெண்ட புருடாவெல்லாம் கேக்க நல்லாத்தானிருக்கு. ஏனுங்கோ! அப்ப வன்னியில அந்த வாகனத்தை இலக்கத்தகட்டோட பாக்கிறவனுக்கு உதொண்டும தெரியாதோ? குறைந்தபட்சம் காவல்துறை இலக்கத்தகடே அணியிறேல எண்டாவது ஒரு கதை சொன்னா அதில ஞாயமிருக்கு.
அதவிட அங்க வாகன நெரிசலில்லை எண்டு விட்டா ஒரு கதை. கிளிநொச்சியோ வாகன நெரிசலில்லாத இடம்? இப்பதான், குறிப்பா மகிந்த வந்தபிறகு கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அதுக்கு முந்தி கிளிநொச்சியின்ர வாகன நெரிசல்பற்றி அங்க இருந்தவைக்குத் தெரியும். நடந்த விபத்துகளின்ர எண்ணக்கையும் தெரியும்.
மெதுவா ஓடுற கதையெல்லாம் ஒருகாலத்தில சரி. அப்ப மண்ணெண்ணையில ஓடின வாகனங்களும், பழுதாப்போன பாகங்களோட ஓடின வாகனங்களும் மெதுவாப் போயிருக்கும். பத்தாததுக்கு குண்டும்குழியுமான பாதைக்குள்ள அப்பிடித்தான் ஓடவேண்டியிருந்தது. இப்ப அப்பிடியோ? வேகக்கட்டுப்பாடு இருக்கிறதால ஓரளவு பரவாயில்லை.
புலிகளின்ர அங்கத்துவ இலக்கத்தகடு மூலமா ஒரு படையணியின்ர எண்ணிக்கைய அறியலாம். ஆனா அதுக்காக புலிகள் இண்டை வரைக்கும் அது வெளியில தெரியக்கூடாதெண்டு நினைக்கவேயில்லை. இண்டை வரைக்கும் சில துறைகளைத் தவிர்த்து பெரும்பாலான படையணிகளுக்கு, இலக்க முறையைக்கூட மாத்தவேயில்லை. தங்கட அங்கத்துவ இலக்கத்தை மறைக்கிறதுக்கு ஆரும் முயற்சிக்கிறதுமில்லை. சனத்துக்கு அவயின்ர தகட்டிலக்கங்கள் வடிவாத் தெரியும். அவை மக்களுக்கு தெரியவைக்கிறதுக்கு இயக்கம் பின்னிற்கிறதுமில்லை.
உதுக்க வாகன எண்ணிக்கைதான் பிரச்சினையா வந்திட்டுதாக்கும்.
அதுசரி, எண்ணிக்கை வெளியத் தெரியாதபடி இலக்கமுறையை வடிவமைக்கிறதுகூட பெரிய இமாலயப்பிரச்சினையாக்கும்.