04-16-2006, 08:15 PM
நன்பரே இந்தப்படத்தை வைத்துக்கொண்டு எமது காவல்த்துறையை விமர்சிப்பது அழகில்லையென நினைக்கின்றேன் ஏனெனில் இந்தப்படம் எடுக்கப்பட்டதன் நோக்கம் வேறு வேறு நாட்டு காவல்த்துறையிடம் குற்ரத்தடுப்புப்பிரிவு. போதைத் தடுப்புப்பிரிவு. போக்குவரவு கண்காணிப்புப்பிரிவு. வீதிப்பாதுகாப்புப்பிரிவு என வேவ்வேறு பிரிவுகள் உள்ளது போல் எமது காவல்த்துறையிலும் இருக்கலாம்அல்லவா? எதிரியின் வீதியோர குண்டுத்தாக்குதலில் இருந்து எமது மக்களை பாதுகாக்கவே இவர்கள் வீதிப்பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என எமது தெரியாத தாயக உறவுகளுக்கு எடுத்துக்காட்டவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என நினைக்கின்றேன். அந்தந்தப்பிரிவினர் அந்தந்த வேலையை சரிவரச்செய்தால் நிர்வகிப்பது இலகுவாக இருக்கும் அல்லவா அதேதான் எமது காவல்த்துறையும் செய்கின்றது எமது மக்கள் சிங்களஅடக்குமுறைக்குள்ளும் போராட்ட சூழளுக்குள்ளும் வாழ்ந்தவர்கள். அவர்கள் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்துள்ளார்கள். அவர்கள் எல்லேரும் போராட்ட காலத்தில் இப்படிப்பட்ட வாகனனெரிசலையோ வீதிக்கட்டுப்பாட்டையோ சந்தித்ததில்லை அவர்கள் போராட்ட காலத்தில் தாங்கள் வாகனமில்லாமல் பட்ட கஸ்ரத்தை உணந்து அவர்கள் இப்போது ஈருளி சிற்ருளி மகிழ்ருளி என வேண்டிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட புதியவர்களுக்கு வீதிக்கட்டுப்பாடு தெரியாமல் இருக்கலாம் அப்படிப்பட்டவர்களுக்கு எமது காவல்த்துறையின்ர் போதியளவு விழக்கம் அளிக்கின்றனர். நீங்கள் விமர்சிச்ச படத்துக்கு பின்னால் வருபவர் அப்படிப்பட்ட ஒரு வர்ராக இருக்கலாம் அல்லவா? நன்பரே எதையும்மே எடுத்தவுடன் செய்து முடிக்க இயலாது படிப்படியாகத்தான் செய்யவேண்டும் ஏனெனில் எமது மக்கள் வாழ்ந்த சூழல் அப்படிப்பட்டது. நான் விமர்சிக்கவேண்டாம் என்று கருதவில்லை விமர்சியுங்கள் விமர்சிக்கலாமா என்று பார்த்து பிளையை உறுதிப்படுத்தி விமர்சியுங்கள் விமர்சனங்கள் கூடும்போதுதான் வழர்ச்சியும் கூடும். நன்றி

