04-16-2006, 03:43 PM
வன்னியில் தலைக்கவசம் அணியவேண்டுமென்று இன்னும் கட்டாயப்படுத்தப்படவில்லை.
அதேநேரம் அதைக்குறித்து நிச்சயம் கேள்விகேட்கப்பட வேண்டும். இன்னமும் யுத்தம் அது இது எண்டு சும்மா விதண்டாவாதம் கதைச்சுக்கொண்டு இருக்க ஏலாது. தலைக்கவசம் வாங்க பணச்சிக்கல் என்ற கதை எடுபடாது. அது விதண்டாவதாம். போராளிகள் தலைக்கவசம் அணிகிறார்களென்பதும் பொய்யான தகவல். வெகுசிலர் மட்டுமே தலைக்கவசமணிந்து செல்கிறார்கள். காவல்துறை மட்டுமே முழு அளவில் தலைக்கவசமணிந்து செல்கிறது. வேகக்கட்டுப்பாடு நாற்படு கிலோமீற்றராயிருப்பதால் அணியவேண்டிய தேவையில்லையென்பதும் தவாறன கருத்து. கிளிநொச்சி நகர்ப்பகுதியில் இரண்டு கிலோமீட்டர்களுக்கு மட்டுமே தொடர்ச்சியாக நாற்பது கிலோமீற்றர் என்ற வேகக்கட்டுப்பாடுண்டு. மிகுதி இடங்கள் அதற்கும் மேல். ஆனால் அந்தக் கிளிநொச்சி நகர்ப்பகுதயில்தான் இதுவரை நடந்த விபத்துக்களில் முக்கால்வாசி நடைபெற்றுள்ளன. ஆகவே எல்லா இடத்திலும் தலைக்கவசத்துக்கான தேவையுள்ளது.
இலக்கத்தகடு பற்றிய கேள்விக்கு குடிநீர் சுகாதாரச் சாட்டுக்களெல்லாம் எப்படி வந்தனவென்று தெரியவில்லை. இன்றும் வன்னியில் மக்களுக்கு மட்டும் மிகத்தீவிரமாக இலக்கத்தகட்டு நடைமுறையுள்ளது. யாழ்ப்பாணத்தில்தான் புலிகளின் வாகனங்களுக்குப் பரிவு ரீதியான இலக்கத்தகட்டு முறையிருந்தது. வன்னியில் அவை கைவிடப்பட்டுவிட்டன. அதற்குச் ஏற்றுக்கொள்ளக்கூடிய சரியான காரணமுண்டு. ஆனால் போராளிகளின் இருசக்கர உந்துருளிகளுக்கு இலக்கத் தகட்டை அறிமுகப்படுத்தாமலிருப்பதற்கு எந்தச் சாட்டும் சொல்ல முடியாது. காவல்துறை வாகனங்களுக்கு இலக்கத்தகடில்லாததுக்கும் எந்தச் சப்பைக்கட்டும் கட்ட முடியாது.
ஆனால் காவல்துறை வாகனத்துக்கு ஆங்கிலத்தில் ஏன் பேர் எழுத வேணும் எண்டு கேக்கிறது புத்திசாலித்தனமில்லை. வாகனத்தின்ர முன்பக்கத்தில தமிழில எழுதிக்கிடக்கு. பக்கவாட்டில ஆங்கிலத்தோட தமிழிலயும் எழுதியிருக்க வேணும் எண்டு சொல்லலாம். (காவல்துறை எண்டு எழுத அகலாம் காணாது எண்டும் யாராவது சொல்லலாம்.)
தாக்குதல் நடத்துபவர்கள் மோட்டார் சைக்கிளில வந்து தாக்குதல் நடத்துகினம எண்டது சரியான வாதம். ஆனா அதுக்கு அரசபடையெல்லோ தலைக்கவசத்தை நிப்பாட்ட வேணும்? புலியளும் அரசபடையினரும் ஒரே ஆபத்தையா எதிர்நோக்குகினம். அப்பிடித்தான் புலிகளின்ர பகுதிக்குள்ள தலைக்கவசத்தால ஆபத்தெண்டா எல்லோரையுமெல்லோ நிப்பாட்ட வேணும். பிறகெதுக்கு சிலர் மட்டும் கவசமணியிறது, பலர் அணியாமல் திரியிறது எண்டு நிலமை இருக்கு? துவக்குகளோட தலைக்கவசமணிந்து போற போராளியள என்னவிதத்தில உறுதிப்படுத்திறது? புலிகளின்ர கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ள தாக்குதலபாயத்தைச் சாட்டா வைச்சு தலைக்கவச விசயத்தை அணுகிறது பொருத்தமில்லாத வாதம். காவடி சொல்வது 2000 இன் இறுதியில் வன்னியில் பெரிய நெருக்கடி நிலைதான். யாரும் வெளியில் பகிரங்கமாத் திரியப் பயந்த நாட்கள்தான். ஆனா அதுக்கும் தலைக்கவசத்துக்கும் என்னப்பா முடிச்சு? அவன் கிளைமோர் வைச்சு அடிக்கிறதுதான் பிரச்சனை. அதுக்குள்ள இன்னொரு கதைவிடுறார். புலியள் முகத்தை வைச்சுத்தான் ஆக்களை அடையாளங்காணிறது எண்டிட்டு, போராளிகளில பலருக்கு அடையாளம் தெரியாமல் முகத்தை மறைக்க தலைக்கவசமணிய கட்டாயப்படுத்தப்படுதாம். அது உண்மை. ஆனா அப்படித் தலைக்கசவமணியிற போராளியள என்னெண்டு இனங்காணுறது? இயக்கமோட்டச் சைக்கிளிளுகளுக்கு இலக்கத்தகடுமில்லை. புதுக்குடியிருப்பு - பரந்தன் வீதியில இயக்கச் சீருடை போடாம வாற எல்லாரையும மறிக்கிறதுதான். தலைக்கவசம் போட்டு வந்தா என்ன வராட்டி என்ன?