04-16-2006, 12:22 PM
ஆம் UKRAJ உங்களின் கேள்விகள் சரியே. யாழ் குடா நாட்டில் இலக்கத்தகடுகள் வழங்கும் நடைமுறை போக்குவரத்துப்பிரிவினரால் 1993 இல் ஆரம்பிக்கப்பட்டது. அதற்கு முதலே தமிழீழ அரச வாகனங்களுக்கு மாவட்டங்களின் குறியீட்டுக்கேற்ப அ,இ,உ,ஐ,எ என எழுத்திடப்பட்ட இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டன. இன்று தமிழீழ ஆழுகைக்குட்பட்ட வன்னி நிலப்பரப்பில் எந்த ஒரு வாகனமும் இலக்கத்தகடுகள் இல்லாமல் நடமாட முடியாது. அப்படி நடமாடினால் காவல்த்துறையினரிடமோ, அல்லது தமிழீழ உந்துருளிப்படையணியிடமோ, அல்லது தமிழீழ விசேட அதிரடிப்படையினரிடமோ(STF) சிக்கவேண்டி நேரிடும் அது அப்படியிருக்கும் போது காவல்த்துறையினர் எப்படி இலக்கத்தகடுகள் இல்லாமல் தெருவுக்கு வாகனத்தில் வருவர். இது ஊரவன் குசுவினால் குற்றம் ஆனால் குருக்கள் குசுவினால் குற்றமில்லை என்பது போல் அல்லவா இருக்கிறது. அடுத்தது தமிழீழத்தில் ஆங்கில பெயர்களில் பெயரிடப்படுவதை முடிந்த வரை குறைக்குமாறு நிர்வாகப்பிரிவுகள் கூறிவருகையில் காவல்த்துறை வண்டியில் போலீஸ் என ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது வேடிக்கையே.
மு.கு: நாங்கள் இங்கு காவல்துறைபற்றியே வாதிடுகிறோம் யாரும் அநாவசியமாக விடுதலைப்புலிகளை இங்கு பாவிக்காதீர்- நன்றி
மு.கு: நாங்கள் இங்கு காவல்துறைபற்றியே வாதிடுகிறோம் யாரும் அநாவசியமாக விடுதலைப்புலிகளை இங்கு பாவிக்காதீர்- நன்றி

