04-16-2006, 08:54 AM
தமிழீழத்தின் பொருளாதார நடவடிக்கைகள் சிறீலங்கா ரூபாய்களில் நடைபெறும் வரை புலத்திலிருந்து அனுப்பப்படும் பணம் அனைத்தும் அன்னியச் செலாவணியாக சிறீலங்காவிற்கு வலுச்சேர்க்கிறது. இது தற்பொழுது ஒரு தவிர்க்க முடியாத பக்க விழைவு. புலத்திலிருந்து செல்லும் பணம் வெளிநாட்டு நாணயமாக தமிழீழ பிரதேசத்துக்குள் செல்வதை ஊக்குவிக்க வேண்டும். தற்பொழுது பலர் தென்னிலங்கையில் மாற்றிச் செல்கிறார்கள். இதை முற்றாக தவிர்த்தால் எமது நடவடிக்கைகளால் தமிழீழ வைப்பகத்திற்கு அதிக பொருளாதார அதிகாரம் கிடைக்கும்.
அதாவது சிறீலாங்காவிற்கு அன்னியச் செலாவணியாக மாறுவதை தவிர்க்க முடியாது ஆனால் அதை எமது கட்டுப்பாட்டிலுள்ள நிர்வாக கட்டமைப்பினூடாக ஒருமித்துச் செய்தால் அதை எமக்கு சாதகமாகவும் மாற்றிக் கொள்ளலாம். இது இடைநிலை தீர்வாக இருக்கும்.
தமிழீழ வைப்பகத்தின் விரிவாக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் அதன் பொருளாதார வலு சிறீலங்கா ரூபாயின் பெறுமதியை நிர்ணயிக்கும் சிறீலாங்கா மத்திய வங்கியின் பங்காளியாக மாற்றும். தமிழீழ வைப்பகம் நாணயமாற்றுச் சேவையை ஆரம்பித்து உலகின் முக்கிய நாணயங்கள் பற்றிய ஆய்வுகளை நடத்தி அதன் பொறுமதியை அவதானிக்கும் பிரிவை உருவாக்க வேண்டும். சிறீலங்கா ரூபாயின் volatility கட்டுப்படுத்த அது உதவும்.
கிராமிய அபிவிருத்தி வங்கி என்று ஒன்றும் உள்ளது. அது சுய தொழில் ஊக்குவிப்பு கடனுதவிகளை வழங்கிறது, பள்ளிச் சிறுவர்களிடைய சேமிப்பு பழக்கங்களை ஊக்குவிக்கிறது.