04-16-2006, 08:39 AM
தென்மராட்சியில் கிளைமோர் தாக்குதல் - ஒரு சிப்பாய் பலி;
- பாண்டியன் - Sunday, 16 April 2006 11:25
யாழ். தென்மராட்சியின் மட்டுவில் பகுதியில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட கிளை மோர் தாக்குதலில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. (மேலதிக விபரம் இணைப்பு)
வீதி ரோந்தில் ஈடுபட்ட படையினர் மீது கனகம்புளியடிச் சந்திக்கு மேற்கே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கிளைமோர் தாக்குதலையடுத்து படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளப் பட்டதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதன்போது இரு படையினர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாகவும் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இத்தாக்குதலில் இரு படையினர் கொல்லபட்டும், மேலும் மூவர் படுகாயமடைந்ததாக ஆரம்பத்தில் தென்மராட்சியில் உள்ள இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Sankathi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>