04-16-2006, 02:12 AM
<span style='font-size:23pt;line-height:100%'>போராட்டத்தின் பதிவுகளை தனது எழுத்துஇ பேச்சுஇ ஒவியம் சிற்ப்பம் போன்றவற்றால் வெளிப்படுத்தியவர் கவிஞர் நாவண்ணன். தமிழன் சிந்திய இரத்தம்இ கரும்புலி காவியம்இ இனிமைத் தமிழ் எமதுஇ ஈரமுது உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கினார். அரங்காற்றுகையிலும் தனக்கென தனியிடத்தை பிடித்து கொண்டவர். நாவண்ணனால் தயாரிக்கப்பட்ட வலியும் பழியும் என்ற பிரமாண்டமான நாடகம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. புலிகளில் தயாரித்த கரும்புலிகள் காவியத்தை நூலாக வெளியிட்ட அதே வேளை பல்வேறு நூல்களையும் வெளியிட்டார். அதே போல் ஓவியம் சிற்ப்பம் ஆகிய வற்றை வெளிப்படுத்திய அவர் இறுதிக்காலத்தில் ஒளிக்கலையிலும் செயற்ப்பட்டார். தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் இரண்டு தடவைகள் தங்கப்பதஙக்கம் வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். 1998 ம் ஆண்டு புலிகளின் குரலில் சிறப்பாக செயற்ப்பட்டமைகாககவும்இ அதன் பின்னர் கவியம் நூல் உருவாக்கம் கலை இலக்கியம் போன்ற செயற்பாடுகளுக்காக இரண்டாவது தடவையும் கெளரவிக்கப்பட்டார்</span>
<span style='font-size:17pt;line-height:100%'>தகவல்: புலிகளின்குரல்</span>
<span style='font-size:17pt;line-height:100%'>தகவல்: புலிகளின்குரல்</span>
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

