04-15-2006, 10:03 PM
சண்தொலைக்காட்சியை பொறுத்தவரை தாமே பெரியவர்கள் என்ற நினைப்பு. பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை இலங்கை வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவரும்., அதை தென்னிந்தியாவில் சண் தொலைகாட்சியுூடாக நடாத்தி வந்தவருமான ஈழத்து அறிவிப்பாளர் அப்துல் ஹமீத் அவர்களை சண் hP.விக்காக மட்டும் பணியாற்று மாறு கட்டாயப்படுத்தியதன் விளைவாய் அவர் சண் hP.வியிலிருந்து வெளியேறினார். தற்போது அவர் ராஜ் hP.வியில் ராஜகீதம் நிகழ்ச்சியையும் ஏனைய தொலைக்காட்சிகளிலும் பணியாற்றுவதாக அறிந்தேன். ஊடகம் என்பது மக்களுக்கானதே தவிர வியாபாரத்துக்கானதல்ல. அதை ஊடகத்துக்குள் இருக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டும். தமிழ் நாட்டின் கிராமப்புறங்களின் நிலையை தமிழ் நாட்டில் இருக்கும் எந்த ஒரு தொலைகாட்சியாவது படம்பிடித்த காட்டியதா என்றால்...விடை 0 தான். ஆனால் இதை தட்டிக் கேட்க வேண்டிய தார்மீக பொறுப்பு தமிழக மக்களிடம் உள்ளது. ஆனால் சண் hP.வி பார்ப்பவர்கள் தி.மு.க என்றும் ஜெயா hP.வி பார்ப்பவர்கள் அதிமுக என்றும் ராஜ் hP.வி பார்ப்பவர்கள் பொது நல வாதிகள் என்ற கணக்கில் மக்கள் பிரிந்திருக்கையில் இது சாத்தியமா?
<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>

