Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி.....
#8
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் சூழலே" என உறுதிபட எடுத்துக்கூறிச் சென்றார் "சூழலே" அணித்தலைவர் நிதர்சன் அவர்கள். </b>

சமூகத்தின் மீது கோபம் கொண்ட இளவயதினனாக தனது உணர்வுகளை கொட்டித் தீர்த்தார். புகலிடத்து மண்ணாக இருந்தாலென்ன, தாய்நிலத்து மண்ணாக இருந்தாலென்ன - பிள்ளைகளை சரியாக புரிந்துகொள்ளத் தவறுகிற சமூகத்தால் அதாவது சூழலால் தான் இடைவெளிகள் அதிகமாகிறது என்று சொல்லிச் சென்றார். குறிப்பாக புலம்பெயர்ந்து வாழுகிற எமது தமிழ்ச் சமூகத்தில் பெற்றோர் - பிள்ளை முரண்பாடுகளும், அதனால் உருவாகிற இடைவெளிகளும் எதனால் என்று கேள்வி எழுப்பினார். அவரே அதற்கு அருமையாகப் பதிலும் சொன்னார். மாறுபட்ட புகலிடச் சூழல் தான் ஏற்கனவே இயல்பாக இருக்கிற இடைவெளியை இன்னும் பெரிதுபடுத்துகிறது என்றார். பல்லின சமூகங்களும், பல் கலாச்சாரங்களும் இணைந்த சூழலோடு முரண்பட்டு நிற்கிறது தமிழ்ச் சமூகச் சூழல். இந்த முரண்பாட்டுக்குள் சிக்கித் தவிக்கிறார்கள் பெற்றோர்களும் பிள்ளைகளும் என்று சிறப்பாக தனது வாதத்தை முன்மொழிந்தார். அதற்கு பல உதாரணங்களையும் சுட்டிக் காட்டினார்.

பக்கத்து வீட்டில் வசிப்பவர் யார் என்று அறியாத சூழல், எம்மைச் சுற்றி நடப்பதை அறியமுடியாமல் துரத்துகிற பொருளாதார சிக்கல், அடுத்தவன் போலவே வாழ விரும்புகிற மனோநிலை, இயந்திர மயமாதல், உலக மயமாதல் போன்ற சூழற்காரணிகளை அடுக்கிக் கொண்டே போனார். மிக அழகாக ஒன்றைச் சொன்னார்: "சூரிய ஒளியில் பிள்ளையின் முகம் பார்த்த காலங்கள் போய், மின்னொளியிலே பிள்ளையின் முகம் பார்க்கும் காலத்தில் நாம் வாழுகின்றோம்". மனித உணர்வுகள் எங்கே போயின? அன்பு பாசம் எங்கே போயின? கொஞ்சி மகிழ்தல், கூடி வாழ்தல் எங்கே போயின? இவையெல்லாம் எல்லாமல் புரிதல் எங்கிருந்து வரும்? புரிதல் இல்லாமல் நெருக்கம் எங்கிருந்து வரும்? நெருக்கமில்லாவிடில் இடையில் வெளிதானே தோன்றும்? இந்த நிலையைத் தோற்றுவித்தது என்ன? சூழல்தானே என்கிறார். (--> "இந்த சூழலை உருவாக்கியவர்கள் யார்?" என்று மற்ற இரு அணியினரும் கூட்டணி போட்டு தாக்கப்போகிறார்கள். கவனம்.)

அடுத்து, யுத்த சூழல் பற்றி குறிப்பிட்டார். யுத்த சூழல் தந்த வடுக்களையும் - அவற்றினால் சமூகத் தளத்தில் ஏற்பட்டிருக்கிற முரண்பாடுகளையும் - அவை குடும்பங்களுள் விளைவித்திருக்கிற இடைவெளிகளையும் குறிப்பிட்டார்.

பெற்றோர்-பிள்ளைகள்-முரண்பாட்டிற்கு காரணம் (அல்லது முரண்பாடு தொடங்குகிற இடம்): காதல், கல்வி, (அளவுக்கதிகமான) கட்டுப்பாடு, குறைகூறல் என வரிசைப்படுத்துகிறார். இவற்றுக்கு காரணம் சூழல் என்றும் குறிப்பிட்ட அவர், சூழல் என்பது தினம் தினம் எம்மை சுற்றி நிகழ்பவையை மையமாகக் கொண்டதே என்றும் குறிப்பிடுகிறார். குழுவாக இருக்கிற இளைஞர் கூட்டத்துள் ஒருவன் புகைப்பிடித்தால் ஒட்டுமொத்தமாய் குறைகூறி குடும்பங்கள் மத்தியில் இடைவெளியை உருவாக்குவது யார்? இந்த பாழாய்ப்போன சமூகம் தான் என்கிறார். (--> உண்மையா? சமூகம் குறைகூறுகிறது என்றால், பெற்றோர் பிள்ளைகளிடையே உண்மையான புரிதல் இருந்தால் ஏன் சமூகத்தைப் பொருட்படுத்துகிறார்கள் என்கிற கேள்வியை எழுப்பக் காத்திருப்பார்கள் மற்றைய அணியினர்.).

சூழலுக்கு அல்லது சமூகத்துக்கு பயந்த பெற்றோர் தமது பிள்ளைகள் மீது அளவுக்கதிகமாக அழுத்தங்களை பிரயோகிக்கிறார்கள். அழுத்தங்கள் அதிகமாக அதிகமாக பிள்ளைகள் குமுறி வெடிக்கிறார்கள். இந்த வெடிப்பு பெற்றோர் பிள்ளைகள் இடையே இடைவெளியாக உருவெடுக்கிறது என்று அழுத்தமாக சொல்லிச் சென்றார்.

இன்னொன்றையும் இறுதியாக ஆனால் உறுதியாகச் சொன்னார். "நீ உன்னை முதல் திருத்து, உலகம் தன்னால் திருந்தும்", "சூழலை குற்றம் சாட்டி நீ தப்பித்துக்கொள்ளாதே" என்றெல்லாம் எதிரணியினர் சொல்லலாம் - ஆனால், நானும் (இளைஞர்களும்) பெற்றோர்களும் திருந்துவதற்கு (இடைவெளிகளைக் குறைப்பதற்கு) தகுந்த சூழலை இந்த சூழல் (சமூகம்) உருவாக்கித் தந்தால் தான் தனிமனிதனாக நாம் திருந்த முடியும் என்றார். சேற்றுக்குள் இருந்துகொண்டு சேறுபடாமல் இருக்கச் சொன்னால் எப்படி முடியும்?

இப்படியாக, தனது எண்ணங்களை தனது அணிசார்பாக முன்வைத்துச்சென்றார். பெற்றோர்களையும், பிள்ளைகளையும் பிரிக்கிற சூழலை கடுமையாகச் சாடிச்சென்றார்.

சரி அணித்தலைவர்கள் எல்லாம் தமது கருத்துக்களை முன்வைத்துவிட்டார்கள். இனி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் பிள்ளைகளே" என்று வாதாட வந்திருக்கும் "ரமா" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். பிள்ளைகளைக் கிள்ள வாருங்கள் ரமா... <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 03-31-2006, 12:29 AM
[No subject] - by sathiri - 04-01-2006, 04:32 PM
[No subject] - by இளைஞன் - 04-02-2006, 09:17 PM
[No subject] - by Thala - 04-02-2006, 11:05 PM
[No subject] - by இளைஞன் - 04-04-2006, 10:07 PM
[No subject] - by Nitharsan - 04-07-2006, 05:54 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2006, 07:11 PM
[No subject] - by RaMa - 04-17-2006, 11:29 AM
[No subject] - by இளைஞன் - 04-21-2006, 07:00 PM
[No subject] - by Sujeenthan - 04-24-2006, 08:23 PM
[No subject] - by இளைஞன் - 04-29-2006, 07:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)