04-15-2006, 02:08 PM
<b>பருத்தித்துறையில் இளைஞர் சுட்டுக்கொலை!!</b>
யாழ். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் இளைஞரின் தந்தையாரும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் கற்கோவளம் விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் எஸ்.தேவராசாவையும் அவரது மகன் மரியதாசையும் இலக்கு வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றனர்.
இதன் போது 25 வயதுடைய மரியதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது தந்தை படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார்.
தகவல்:புதினம்

[size=14] ' '