04-15-2006, 03:41 AM
<b>திருமலை வன்முறையில் இந்திய சோதிடர் உள்ளிட்ட மூவர் பலி </b>
திருகோணமலை நகரில் நேற்று வெள்ளிக்கிழமை சிங்களக் காடையர்கள் நடத்திய கொடூர வெறியாட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இரண்டு தமிழர்கள் மற்றும் ஒரு இந்தியரது சடலங்கள் இன்று காலை திருகோணமலை பொது மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டன.
கிண்ணியாவில் நேற்று வெள்ளிக்கிழமை சிங்களக் காடையர்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் நடேசபுரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மகேஸ்வரி (வயது 60) என்பவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
தென் இந்தியாவின் பெங்களுர் இராமமூர்த்தி நகரைச் சேர்ந்த சோதிடரான வெங்கடசாமி வெங்கட்ராமன் (வயது 30), திருகோணமலை அரச செயலக ஊழியரான தண்ணிமலை நமசிவாயலிங்கம் (வயது 28) ஆகியோரும் நேற்றைய வன்முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையில் போக்குவரத்துச் சேவைகள் முற்றாகத் தொடர்ந்து முடங்கியுள்ளது வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. திருமலை நகரம் வெறிச்சோடிக் காணப்படுகிறது.
செய்திகள்:புதினம்

[size=14] ' '