06-26-2003, 07:40 AM
பொங்குதமிழ்| நிகழ்வின் மூலம் தமிழரின் ஒற்றுமையை உலகறியச் செய்யுங்கள்.
- இவ்வாறு பல்வேறு தரப்பினரும் அறை கூவல் விடுத்துள்ளனர்.
யாழ். ஆயர்யாழ். ஆயர் வணக்கத்துக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை விடுத்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-ஓர் இனத்தின் ஒற்றுமையிலேயே அதன் வளர்ச்சியும் விடுதலையும் தங்கியுள்ளது. பொங்குதமிழ் நிகழ்வின் மூலம் தமிழ்மக்கள் அனைவரும் தமது ஒற்றுமையையும் விடுதலை உணர்வையும் தெளிவாக வெளிக்கொணர வேண்டும். மிக நீண்டகால கடின முயற்சியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழியாகத் தொடங்கப்பட்ட பேச்சு மீளவும் தொடரவேண்டும். பொங்குதமிழின் ஒரே நோக்கம் மீளவும் பேச்சுக்களை ஆரம் பித்து சுதந்திர வாழ்வை என்றும் உறுதி செய்வதாக இருக்கவேண்டும் - என்றுள்ளது.
இந்துமத குருமார் ஒன்றியம்
சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகாரமுள்ள இடைக்கால நிர்வா கக் கட்டமைப்பொன்றை அரசு வழங்கு வதன் மூலம் இடைநிறுத்தப்பட்ட பேச்சு தொடர்ந்தும் இடம்பெற்றாலே நிரந்தர சமாதானம் என்ற தமிழ்மக்களின் கனவு நிஜமாகும். யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் நடை பெறவுள்ள பொங்குதமிழ் அஹிம்சைப் போரில் இன, மத பேதமின்றி சகல மக்களும் எமது உள்ள உணர்வு களை சர்வதேசமும் அறிந்துகொள் ளக்கூடியதாக அணிதிரள்வோம் - என்றுள்ளது.
எம்.கே.சிவாஜிலிங்கம் எம்.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திருப்பதா வது:-
ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கே உரிய பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை அதாவது தனது தலைவிதியைத் தானே தீர்மானிக் கின்ற உரிமையைக் கொண்டிருப்பது போல அந்த உரிமை தமிழ்த் தேசிய இனத்துக்கும் உண்டு என்பதை திட்ட வட்டமாக இந்தப் பொங்குதமிழ் நிகழ்வில் வெளிப்படுத்துவோம் என்றார் அவர்.
கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம்
யாழ்.மாவட்ட விவசாய நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கி எழும் மூன்று லட்சம் தமிழர்களின் ஆறு லட்சம் கரங்கள் உயரும்போது எம்நெஞ்சை நிமிர்த்தி நிற்போம். கூட்டுறவாளர்களும் கூட்டுறவுப் பணியாளர்களும் எழுச்சி கொண்டு பொங்கு தமிழில் சங்கமித்து புதிய சரித்திரம் படைப்பதை உலகம் வியந்து பார்க்கட்டும் - என்றுள்ளது.
உயர்தொழில்நுட்பக்கல்வி நிறுவகம்
இலங்கை உயர்தொழில் நுட்பக் கல்வி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-எமது உரிமைகளை உலகுக்கு எடுத்துக்காட்ட எழுந்த பொங்கு தமிழ் நிகழ்வை சிங்கள இராணுவத்தைப் பயன்படுத்தி அரசு அடக்க முயன்றது. நிகழ்வுக்கு வந்த மக்களைத் திருப்பியனுப்ப முனைந்தது. அன்று அடக்குமுறையின் மத்தியில் பொங் கிய பொங்குதமிழ் இன்று மீண்டும் ஒருமுறை பொங்கவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்பது அவசியம் என்றுள்ளது.
கனடா தமிழ் மாணவர் அமைப்பு
கனடாவில் செயற்படும் அனைத்துக் கல்லு}ரிகளின் தமிழ் மாணவர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-நாம் பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணை ஆக்கிரமித்தது மட்டுமன்றி உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர் வையில் எமது மண்ணை நிரந்தரமாகத் தனது ஆதிக்கத்தில் வைத்தி ருக்க முனையும் ஆதிக்க சக்திகளை சர்வதேச சமூகத்துக்குத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தும் பொங்கு தமிழ் நிகழ்வை புலம்பெயர்ந்த தமிழ் மாணவர் சமூகமாகிய நாம் எந்த வொரு எதிர்க்கருத்துமின்றி ஆதரிக்கிறோம் - என்றுள்ளது.
மோட்டார் ஊர்திச் சேவைச்சங்கம்
வடபிராந்திய முச்சக்கர மோட்டார் ஊர்திச் சங்கம் தெரிவித்துள்ள தாவது:-இனப்பிரச்சினைக்கான தீர்வினை நாம் விரைந்து கண்டிடவும் உலக சமுதாயம் எமது உணர்வலையை உணர்ந்து கொள்ளவும் உந்து சக்தியாக உள்ள பொங்குதமிழ் நிகழ்வில் நாம் அனைவரும் உணர்வுபுூர்வ மாகக் கலந்துகொள்வோம் - என்றுள்ளது.
பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்
பனை தென்னை வள அபிவிருத் திக் கூட்டுறவுச் சங்கம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:-
தமிழினத்தின் ஆதங்கத்தை வெளியுலகிற்கு உணர்த்த பொங்கு தமிழ் எனும் அஹிம்சைப் போரில் அனைவரும் பங்கேற்பது அவசியம். நிரந்தர சமாதானம் ஏற்படவேண்டு மென்பதே தமிழ்மக்களின் பெருவிருப் பாகும் - என்றுள்ளது.
சனசமூக நிலையங்களின் சமாசம் தென்மராட்சி சனசமூக நிலையங்களின் சமாசம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
வலிகாமத்தின் பணப்பயிர் உற்பத்தியையும், வடமராட்சியின் கடல் வளத்தையும், தென்மராட்சியின் நெற்களஞ்சியத்தையும் திட்டமிட்டு பறித்து, தமிழரை அகதிகளாக்கியுள்ளது இலங்கை அரசு. இந்நிலை இனியும் வேண்டாம். ஒன்றுபட்டு அணி திரண்டு எமது நிலத்தை மீட்போம்.
சிகை ஒப்பனையாளர் சங்கம்
யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஒருவருடத்துக்கு மேலாகி விட்டது. வெளிநாடுகளில் மாறிமாறி இருதரப்புகளும் பேச்சுக்களை நடத்தின. ஆனால், பேச்சுகளில் புலிகள் வலியுறுத்திய இயல்பு வாழ்க்கை இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதை பொங்குதமிழ் நிகழ்வில் ஒன்று திரண்டு வெளிக்காட்டுவோம் - என்றுள்ளது.