Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கியெழும் மக்கள் படை அழைப்பு
#1
<b>எரிக்கும் இனவாத நெருப்பிலிருந்து தப்ப இளைஞர், யுவதிகளே ஆயுதம் ஏந்துங்கள்! பொங்கியெழும் மக்கள் படை அழைப்பு </b>

அறிவிக்கப்படாத பெரும் யுத்தம் ஒன்றை சிங்கள இனவாத அரசும், அதன் கூலிப் படைகளும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளன. இனவாதத் தீ யாழ். மண்ணி லும் நாளை எம் உயிர்களைக் கருக்கலாம். நெருப்பில் எரிக்கப்படும் எம் மக்களைப் பாதுகாக்க இளைஞர், யுவதிகளே அணி அணியாக வந்து தாயக விடுதலைப் போரில் இணையுங்கள்.
இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்தி ருக்கிறது யாழ்.மாவட்ட பொங்கி எழும் மக் கள் படை.
"பொங்கி எழும் மக்கள் படை யாழ். மாவட்டம்' என்ற பெயரில் நேற்று ஊடகங் களுக்கு விடுக்கப்பட்ட ஓர் அறிக்கையில் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:
திருகோணமலையில் இன்று இனவாதத் தீ பற்றி எரிகிறது. யாழ்.மண்ணில் நாளை யும் எம் உயிர்களைக் கருக்கலாம். நெருப் பில் எரிக்கப்படும் எம் மக்களைப் பாதுகாக்க இளைஞர், யுவதிகளே அணி அணியாகத் தாயக விடுதலைப் போரில் இணையுங்கள்.
வடக்கிலும் கிழக்கிலும் அறிவிக்கப்படாத பெரும் யுத்தம் ஒன்றை சிங்கள் இனவாத அரசும் அதன் கூலிப்படைகளும் தமிழ் மக் கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ளன. தமிழ் மக்களை படுகொலை செய்யும் சிங்களக் கொலைக்களங்கள் மீண்டும் தமிழ் மண்ணில் உருவாகி வருகின்றன. திருகோணமலை யிலும் ஏனைய தமிழர் தாயகப் பிரதேசங் களிலும் சிங்கள இனைவாதப் படைகளினா லும் சிங்களக் காடையர்களாலும் அப்பா வித் தமிழ் உறவுகள் எமது சகோதரர்கள், பச் சிளங் குழந்தைகள் வெட்டியும் உயிருடன் எரித்தும் படுகொலை செய்யப்பட்டு வருகின்ற மனிதாபிமானமற்ற செயல் விரிந்து வருகின் றது.
சிங்களக் கொலைகார அரசினாலும் அதன் ஏவலர்களாலும் தேச விடுதலைப் பற்றாளர் கள், கல்வியியலாளர்கள், சிந்தனையாளர்கள், இளைஞர்கள், யுவதிகள் தொடர்ந்தும் இடை விடாது படுகொலை செய்யப்பட்டு வருகின் றனர். 1958, 1983 ஆம் ஆண்டில் துயரம் மிகுந்த சோக நினைவுகள் தமிழ் மக்களின் சுவாசங்களை வருடி வருகின்றது. தமிழ் மக் களை மொத்தம் மொத்தமாகப் படுகொலை செய்வதன் மூலம் தமிழ் மக்களை அடக்கி எமது சுதந்திர தாகத்தையும் அதன் பற்றுதி யையும் தடம் புரளச் செய்துவிடலாம் என இனவாதப் படைகள் சிந்திக்கத் தொடங்கி யுள்ளன. இதன் தொடர்ச்சியாக அது தன் கொலை வெறித்தனத்தை தமிழ் மக்களை உயிருடன் பிணமாக்கும் நடவடிக்கையை வடக்கிலும் கிழக்கிலும் வீச்சாக்கி உள்ளது. இன்று திருகோணமலையில் கொலைவெறி யாட்டம் ஆடும் சிங்கள அரசு நாளை யாழ். மண்ணிலும் தனது கூலிப்படைகளைக் கொண்டு பெரும் படுகொலைகளைச் செய் யத் திட்டமிட்டுள்ளது. நாம் எமது மண்ணில் உரிமைகளோடு சுதந்திரமாக வாழவேண் டும் எனின் ஒவ்வொரு இளைஞனும் யுவதி யிடம் ஆயுதமேந்திப் போராடும் இறுதி நிலைக்கு வரவேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு ஏற்பட்டுள்ளது.
மிகப்பெரிய இன அழிப்பிலிருந்து எமது இனத்தையும் மொழியையும் பாதுகாக்க வும், எமது மண்ணை மீட்கவும் இளைஞர் யுவதிகøளாகிய நாம் அணி அணியாக எமது விடுதலைப் போரில் இணைவோம். நீங்கள் ஏந்தப்போகும் ஆயுதமே உங்களது உயிர் களையும் தமிழ் மக்களையும் பாதுகாக்கும் என்பதை மறந்துவீடாதீர்கள். எதிரியானவன் தமிழீழ மண்ணிலுள்ள இளைஞர், யுவதி களை அழிக்கத் திட்டம் வகுத்து அதனை செயற்படுத்தி வருகின்றான். இந்தப் பெரும் ஆபத்தை அறியாமல், உணராமல் நீங்கள் இருப்பீர்களானால் பெறுமதிமிக்க உங்கள் உயிர்கள் மலிவாக இனவாத அரச படைக ளால் பலி எடுக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள் நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் சிங்கள இனவாத அரசின் கொடுங் கரங்கள் தமிழர் தாயகத்தில் கொலை முயற்சி களைத் தொடரவே செய்யும். எனவே, காலத் தின் தேவையை அறிந்து தேசத்தின் இக்கட் டான சூழ்நிலையை உணர்ந்து ஒவ்வொரு தமிழ் இளைஞனும் யுவதியும் எமது தாய கம் மீட்கும் இறுதி விடுதலைப் போரில் அர்ப் பணிப்புடன் இணையுமாறு வேண்டுகிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு : newstamilnet.com
Friday, 14 Apr 2006 USA
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
பொங்கியெழும் மக்கள் படை அழைப்பு - by Vaanampaadi - 04-14-2006, 08:04 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)