06-26-2003, 07:37 AM
<span style='font-size:19pt;line-height:100%'>~பத்து வருடங்களுக்கு முன்னர் காரைநகர் ~எலாரா| கடற்படைத்தளம் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் பங்குகொண்டார் என்ற குற்றச் சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது.நீதிபதி சரத் அம்பேப்பிட்டிய நேற்று இடம்பெற்ற விசாரணைகளின் முடிவில் இத்தீர்ப்பை வழங்கினார்.
திலகர் என்று அழைக்கப்படும் சண்முகசுந்தரம் ரகுபதி என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புலிகளின் ~ஆஞ்சநேயர்| என்பவரின் தலைமையில் 1990ஆம் ஆண்டு ஓகஸ்ட் முதலாம் திகதியன்றும், 1991ஆம் ஆண்டு மே 29 ஆம் திகதியன்றும் 500இற்கும் மேற்பட்ட புலிகள் இத்தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் பல இராணுவத்தினர் கொல்லப்பட்டனர் என்று எதிரிக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டுள்ளன. தன்னை விசாரித்த பொலீஸாரிடம் எதிரி வழங்கிய குற்றஒப்புதல் வாக்குமூலம் எந்த நிர்ப்பந்தத்தின் பேரிலும் வழங் கப்பட்டதல்ல என்பது முடிவுசெய்யப் பட்டுள்ளது.ஆகவே, இவருக்கு மரணதண்டனை விதிக்கப்படுகிறது என்று நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.</span>