02-14-2004, 05:32 PM
முதலில் உங்கள் அனைவருக்கும் சில விடயங்களை தெளிவுபடுத்தலாம் என நினைக்கின்றேன். இந்த இலங்கை பிரச்சனையை சம்மந்தமான முழுவிபரங்களூம் உங்கள் அளவிற்கோ இல்லை தாத்தா அளவிற்கோ எனக்கு தெரியாது. அதனை நான் ஏற்றுக் கொள்கின்றேன். எனக்கு தெரிந்த மற்றும் கேட்டறிந்த தகவல்களின் அடிப்படையிலேயே நான் எனது வாதங்களை முன்வைக்கின்றேன். அவை தவறாக இருந்தால் உங்கள் கருத்துக்களை விளக்கி முன்வையுங்கள். அனைவரும் அதனை படித்து ஒரு தெளிவான சிந்தனையை பெறலாம். நான் தரக்குறைவான் வார்த்தைகளையோ அல்லது தவறான செய்திகளையோ தருவதில்லை. எனக்கு ஒரு கருத்து உண்மையா/ச்ரியானதா என்று தெரியாத போது அதனை உங்களிமே கேட்டிருக்கின்றேன். நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லியும் இருக்கின்றீர்கள். அதற்கு எனது நன்றிகள்.
நியாயமான காரணம் இன்றி ஒரு கருத்தை நீக்குவது யாழ் போன்ற ஒரு கருத்துக்களத்துக்கு அழகல்ல. அது யாழ் களத்தை ஒரு சுதந்திரமான களம் என்று நம்பும் என்னை போன்றவர்களின் நம்பிக்கையை சிதைக்கும்.
இது ஒரு தனிப்பட்ட ஒருவரின் முயற்சியால் இயங்கிக்கொண்டிருக்கும் களம் என்பதை நான் அறிவேன். அவரது இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள். அதேசமயம் இது போன்ற சிறு சிறு பிரச்னைகளையும் கவனத்தில் எடுப்பார் என நம்புகின்றேன்.
ஒரு இடத்தில் தணிக்கை செய்யும்போது அதற்கான காரணத்தையும் அந்த இடத்தில் குறிப்பிட்டால் சிறப்பா இருக்கும் என்பது எனது கருத்து.
இதனை பற்றி உங்கள் மற்றும் மோகன் அவர்களின் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பாக்கின்றேன்.