Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
லண்டன் ஈழ்பதீஸ்வத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்!
#1
<b>அன்புக்குரிய ஈழபதீஸ்வரர் அடியார்களே!</b>

உங்கள் வழிபாட்டுக்கு நாங்கள் ஒருபோதும் தடையாக நிற்கப்போவதில்லை! இந்த ஆலயம் தொடர்பாக சில முக்கிய விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.... சிந்திக்க தெரிந்த நீங்களே முடிவெடுங்கள்!

வெம்பிளி, அல்பேட்டன், மற்றும் மேற்கு லண்டன் பகுதிகளில் பெருமளவில் வாழும் சைவமக்களுக்கு ஆலயம் இல்லா குறையினை போக்க முழுக்க முழுக்க பொதுமக்களின் பணத்தில் சிவராசா, மன்மதன், ஜெயதேவன், நேமிநாதன், பரமலிங்கம், சௌந்தரராஜன் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதுதான் ஈழபதீஸ்வரர் சிவன் கோவில்.

இங்கு லாபமாக ஈட்டப்படும் பணம் தாயகத்தில் போரினால் பெற்றோரை இழந்து ஆதரவற்று அகதிகளாய் வாழும் குழந்தைகளுக்கு உதவுவதற்கு உங்களின் சம்மத்துடன் ஆரம்பித்தவர்களால் தீர்மானிக்கப்பட்டது.

<b>ஆனால் நீங்கள் ஆண்டவனின் பெயரில் வழங்கும் பணத்திற்கு இப்போ என்ன நடைபெறுகிறது?</b>

இந்த ஆலயம் வரும் இலாபத்தை சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியாகிய ஜெயதேவனும் குடும்பமும் தம்மிடையே பங்கீட்டு கொள்ளும்வகையில் தனியார் வர்த்தக நிறுவனமாக Company House இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆடியார்களே உங்களின் சம்மதத்துடனேயா இந்த ஏற்பாடு நடைபெற்றுள்ளது?

தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்கு உதவுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் இன்று ஜெயதேவன் குடும்;பத்தின் தனிப்பட்ட சொத்தாக மாற்றப்பட்டுள்ளது!

நீங்கள் உண்டியலில் காணிக்கையாக இடும் பணம் ஜெயதேவனின் தனிப்பட்ட நலனுக்கும், லண்டனில் 3 வீடும் கொழும்பில் சில வீடுகள் வாங்குவதற்கும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்குமே பாவிக்கப்படுகிறது.

<b>கோவில் உண்டியல் ஜெயதேவன் வீட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. </b>

தாயகத்தில் மக்கள் அல்லல்படும்போது இங்குள்ள அரசியல்கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது ஜெயதேவனின் சுத்து மாத்துக்களை மறைப்பதற்காகவா?

<b>பிரித்தானியா வாழ் சைவ மக்களான நாங்கள் வேண்டுவதெல்லாம் இதுவே: </b>

கோவில் ஆரம்பித்த காலத்திலிருந்தான கடந்த 8 வருடங்களுக்கான கணக்கினை பங்கிரங்கப்படுத்த வேண்டும்!

கோவில் பொதுமக்கள் உறுப்பினராக சேர்ந்து கொள்ளக்கூடிய வகையில் பொது நிறுவனமாக மாற்றப்பட வேண்டும்!

சைவக்கோவில் ஒன்றை தனியார் வர்த்;தக நிறுவனமாக பதிந்து மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் ஜெயதேவன் குடும்பத்தினர்; உலக சைவ மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்!

இத்தனைக்கும் காரணகர்த்தாவாக இருக்கும் ஜெயதேவன் பொதுமக்களிடம் கோவிலை கையளித்து விட்டு விலக வேண்டும்!

[size=18]<b>ஆலயத்தின் வருடாந்த வருமானம் கிட்டத்தட்ட £450,000 பணம்.</b>

இப்பணம் எங்கே போகிறது என்பதை சற்றேனும் சிந்தித்துப் பார்த்தீர்களா?


ஈழபதீஸ்வரர் ஆலய அடியார்கள் சபை!

ஆகவே 14-04-2006 ஆலயத்திற்குமுன்னால் நாளையதினம் மாபெரும் துண்டுபிரசுரவினயோகம் ஆகவே அனைத்து மக்களும் கோவிலுக்குள் செல்வதை தவிருங்கள். கோவிலுக்கு வருவோர் துண்டு பிரசுரத்தை வாங்கிவிட்டு திரும்பி செல்லுங்கள். வன்முறைகள் பாரிய அளவில் கோவிலுக்குள் நடக்கும் என்று அஞ்சுவதால் ஒருவரும் நாளையும் நாளை மறுதினமும் கோவிலுக்கு செல்லாதீர்கள். உண்டியலுக்குள் பணம் போடுவதை நிறுத்துங்கள.; தமிழ் ஆர்வலர்கள் நாளைய துண்டுபிரசுரவினயோகத்தில் கட்டாயம் கலந்துகொள்ளுங்கள். கோயிலை மக்களிடம் ஒப்படைக்குமாறு ஜெயதேவனை கேழுங்கள்.

Reply


Messages In This Thread
லண்டன் ஈழ்பதீஸ்வத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டம்! - by ஜெயதேவன் - 04-13-2006, 08:59 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-13-2006, 09:00 PM
[No subject] - by நேசன் - 04-13-2006, 09:57 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-14-2006, 06:52 AM
[No subject] - by mathanarasa - 04-14-2006, 07:03 AM
[No subject] - by pandiyan - 04-14-2006, 08:51 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-14-2006, 02:12 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-14-2006, 02:13 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-14-2006, 02:37 PM
[No subject] - by pandiyan - 04-14-2006, 11:18 PM
[No subject] - by pandiyan - 04-15-2006, 12:56 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-15-2006, 07:53 AM
[No subject] - by Subiththiran - 04-15-2006, 09:18 AM
[No subject] - by Anandasangaree - 04-15-2006, 10:41 AM
[No subject] - by pandiyan - 04-15-2006, 04:05 PM
[No subject] - by Selvamuthu - 04-15-2006, 04:38 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-15-2006, 06:10 PM
[No subject] - by Anandasangaree - 04-15-2006, 08:36 PM
[No subject] - by Selvamuthu - 04-15-2006, 09:06 PM
[No subject] - by நேசன் - 04-16-2006, 12:05 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-16-2006, 12:37 AM
[No subject] - by pandiyan - 04-16-2006, 12:41 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-16-2006, 04:29 PM
[No subject] - by pandiyan - 04-16-2006, 08:08 PM
[No subject] - by pandiyan - 04-17-2006, 10:45 AM
[No subject] - by pandiyan - 04-18-2006, 03:50 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)