04-13-2006, 03:22 PM
<b>திருமலையில் 15 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன- பலி 19 ஆக உயர்வு!</b>
[வியாழக்கிழமை, 13 ஏப்ரல் 2006, 20:04 ஈழம்] [ம.சேரமான்]
திருகோணமலையில் சிறிலங்கா இராணுவமும் சிங்கள இனவெறியர்களும் நேற்று புதன்கிழமை நடத்திய கொலை வெறியாட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. இதுவரை 15 சடலங்கள் அடையாளம் காணப்பட்டன.
கொல்லப்பட்டோரில் 6 பேர் தமிழர்கள், 2 முஸ்லிம்கள், 7 பேர் சிங்களவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். லிங்கநகரில் முச்சக்கர வாகனத்தின் உள்ளேயே 3 தமிழர்கள் எரித்துக் கொலை செய்யப்பட்டனர். அந்த சடலங்கள் அடையாளம் காணப்பட முடியாத நிலையில் உள்ளது. மேலும் ஒரு தமிழரது சடலமும் அடையாளம் காணப்படவில்லை.
6 தமிழர்களில் 5 பேர் பெண்கள் என்றும் 7 சிங்களவர்களில் 2 பேர் பெண்கள் என்றும் தெரியவந்துள்ளது.
மரக்கறி சந்தைக்கு எதிரே உள்ள தேங்காய் விற்பனை நிலையத்தின் முன்வாசலில் முதல் குண்டுவெடித்துள்ளது. அதன் பின்னர் சிறிலங்கா இராணுவத்தினரால் கைக் குண்டுகள் வீசப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
முன்னதாக லிங்கநகரில் முச்சக்கர வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் குழு தாக்குதலை நடத்தியது.
திருகோணமலை மருத்துவ அதிகாரிகள் திருமதி கே.ஞானகுணாளன் மற்றும் காமினி குணதிலக்க ஆகியோர் சடலங்களை பிரேத பரிசோதனை செய்தனர்.
தகவல்: புதினம் புள்ளி கோம் www.puthinam.com

[size=18]<b> </b>
[size=18]<b> </b>
IRUVIZHI
[size=18]<b> </b>
IRUVIZHI