04-12-2006, 04:18 PM
<b>திருகோணமலையில் குண்டு வெடிப்பு, 14 பேர் பலி</b>
திருகோணமலை நகரில் நடைபெற்ற குண்டு வெடிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களில் 14 பேர் இறந்து போயுள்ளதாகவும், 45க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இறந்துபோனவர்களில் 10 பேர் பொதுமக்கள, இருவர் இராணுவத்தினர் என்று திருகோணமலை மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் கிழக்கே திருகோணமலையில் இன்று மரக்கறி சந்தையில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததாகவும் அதைத் தொடர்ந்து வன்செயல்கள் நடைபெற்றதாகவும் இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல அதிகாரி தெரிவித்தார். நிலைமையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
திருகோணமலையில் தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை பதட்டமாக இருப்பதாகவும் அப்பகுதியில் இருக்கும் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரவதற்கு போலீசாரும், பாதுகாப்புப் படையினரும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனறு கேட்டுக்கொண்டிருக்கின்றோம் என திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்டினசிங்கம் பி பி சி தமிழோசையிடம் தெரிவித்தார்.