04-12-2006, 04:45 AM
வை.கோவுக்கு கட்சியினை வளர்க்க அதிக சிட்டுக்கள் தேவை. தி.மு.க தரக்கூடிய 22 சிட்டுக்களினை விட அ.தி.மு.க தரக்கூடிய 35 சிட்டுக்கள் கட்சியினை வளர்க்கத்தேவை. வை.கோவிற்கு இரண்டு கட்சிகளும் அணியாயம் செய்தவை. தி.மு.க, புலிகள் உதவியுடன் கலைஞரினைக் கொலை செய்ய முயற்சிக்கிறார் என்று பொய் குற்றம் சாட்டியது. அ.தி.மு.க, புலிகளுக்கு ஆதாரவாக பேசியது என்று பொடாவில் வை.கோவினை அடைத்தார்கள். தனியாக வை.கோ கேட்டால் வெல்லமுடியாது. இரண்டு கச்சிகளும் வை.கோ வுக்குஎதிரிகளாக இருந்தாலும், தற்பொழுது இந்தத் தேர்தலில் வெல்ல அ.தி.மு.க வுடன் கூட்டமைத்துள்ளார். வை.கோ ஈழத்தமிழர்க்காகத் தொடர்ந்து குரல் குடுப்பவர். அவருக்கு எப்பொழுதும் நாம் நன்றிக்கடன் படவேண்டும். தயவு செய்து வை.கோவினைத் தூற்றவேண்டாம். சிலர் இங்கு வை.கோ, அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்தவுடன் ஜெயலலிதா நல்லவர், ஈழத்துக்குக் குரல் கொடுப்பவர் என்றும் எழுதுகிறார்கள். ஜெயலலிதா ஈழத்துக்கும் புலிகளுக்கும் எதிராகவே செயற்பட்டு வந்தவர் என்பதனையும் மறக்ககூடாது.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

