04-11-2006, 11:01 AM
Luckyluke Wrote:தமிழ்நாட்டில் மொத்தம் ஒண்ணரை கோடி குடும்பங்கள் இருக்கின்றன.... அதில் 53 லட்சம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கின்றன.... அவர்கள் வீட்டில் கலர் டிவி இல்லையென்றால் அரசுக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.... இது இரண்டு கட்டமாக வழங்கப்படும்.... இதற்காக ஆண்டுக்கு 540 கோடி செலவாகும்.... ஆண்டுக்கு 30,000 கோடிக்கு பட்ஜெட் போடப்படும் தமிழ்நாட்டுக்கு இது சாத்தியமே....
உங்களுக்கே இது அபத்தமாக படவில்லையா? தமிழ்நாட்டில் உள்ள மிக பெரிய பிரச்சினை கலர்ரீவிதானா?
எத்தனை இளைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், அவர்களுக்கு வேலை வாய்பை உருவாக்கி கொடுங்கள் அவர்களே கலர்ரீவி வாங்கிக்கொள்வார்கள், எவ்வளவு மக்கள் தெருவோரங்களில் பசியுடன் படுத்திருக்கிறார்கள், நித்திரையில் எத்தனை லாறிகள் அவர்கள் மீது ஏறி இருக்கிறது, அதை விட கலர்ரீவி பெரிய பிரச்சினையா? சேரிகளில் போதிய மருத்துவ வசதி இருக்கிறதா? லஞ்சத்தை ஒளிப்பதாக கூறுங்கள், அதுமுடியாது, ஏனெனில் ஆட்சிக்கு வந்தவுடன். செய்வதே அதுதானே, கருனாநிதி சொல்கிறார் தான் முதலமைச்சர் ஆனவுடன் ஆறு கோடிகளுடன் ஒரு சாராய வியாபாரி வந்து, பெட்டியை எங்கு வைப்பது என்று கேட்கிறாராம், அந்த சாராய வியாபாரி இப்போ எங்கே, மாதத்துக்கு 6 கோடி என்றால் வருடத்துக்கு? இது சாதாரனமா கொடுப்பதுதான் என்று, முதலமைச்சருக்கே அவர் சர்வ சாதாரனமா கூருகிறார் என்றால், லஞ்சம் எந்தளவுக்கு ஊடுறுவி இருக்கிறது.
.
.
.

