Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
#1
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?


வார்த்தைகள் விழுங்கி
பார்வைகள் புதைக்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

இதயத்தினுள்ளே ஒரு
புூ விழும் உணர்வுகள் தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

இதழ்கள் மூடி புன்னகைத்து
செவிமடல் சிவக்க நாணி நிற்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மண்ணின் மார்பில் கோலம்போட்டு
பாதம் தேய மண்ணை நோக்கி
கவிழ்ந்து நிற்கும் பெண்மையின்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

கண்கள் செருக
கரங்கள் பிணைய
இதழ்கள் இணையும்
முத்தத்தின் போது தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

வானின் மஞ்சத்தில் பள்ளிகொள்ளும்
பளிங்கு நிலாவை பார்வை வெறிக்க
தலையை வருடி உறங்க மறுக்கும்
விடலையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

விசையின் மீது கரம்வைத்து
இருளை வெறித்திருக்கும்
போராளியின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

கடலின் மீது து}ண்டில் வீசி
அலையை ரசித்துக்கொண்டே
து}ண்டில் அசையும்வரை காத்திருக்கும்
மீனவனின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மண்ணின் மார்பில் முக்குளித்து
மூச்சுத்திணற வெளிவரத்துடிக்கும்
விதையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மலர்களுடன் பேசிப்பார்த்தேன்
அர்த்தம் கிடைக்கவில்லை
நிலவிடம் இரந்து கேட்டேன்
விடை பகரவில்லை
உன்னிடம் கேட்கின்றேன்
மௌனத்தின் அர்த்தம் என்ன ?

கொலுசினால் பேசுகின்றாய்
கைவளையல்களால் மொழிகின்றாய்
மௌனத்தின் அர்த்தம் கேட்டேன்
மௌனத்தினால் கொல்கின்றாயே !

கரவை பரணீ
26-06-2003
[b] ?
Reply


Messages In This Thread
மௌனத்திற்கு அர்த்தம் - by Paranee - 06-26-2003, 06:48 AM
[No subject] - by nalayiny - 06-27-2003, 07:44 AM
[No subject] - by kuruvikal - 06-27-2003, 08:07 AM
[No subject] - by vaiyapuri - 06-27-2003, 10:02 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:52 AM
[No subject] - by S.Malaravan - 07-27-2003, 04:46 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)