Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
திமுக குடும்ப அரசியல் படுத்தும்பாடு.
#1
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சரத்குமார் இன்று ஒரு கடிதம் எழுதி அனுப் பினார். அந்த கடிதம் கீழே

அன்புத் தலைவர் கலைஞர் அவர்களுக்கு.

நான் சார்ந்திருக்கும் இயக்கத்தின் தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு நடிகர் சரத்குமார் எழுதும் கடிதம்.

சில நினைவுகள் மறக்க முடியாதவை. 1997-ஆம் ஆண்டு தமிழ்திரையுலகில் `சூரியவம்சம்' என்கிற மாபெரும் வெற்றியைத் தந்த நான் அரசியல் களத்தில் பிரசாரம் செய்ய இறங்குகிறேன்....

திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சி மலர வேண்டும் என்ற நோக்கோடு த.மா.கா.-தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக களம் இறங்கினேன். எந்த எதிர்பார்ப்போ, வேண்டுகோளோ இன்றி தங்களது கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனும் ஒரே குறிக்கோளோடு செயல் பட்டேன்.

எந்த ஒரு பிரதிபலனும் பாராமல், இரவு-பகல் பாராமல் எப்படி சூறாவளியாக பிரசாரம் செய்தேன் என்பதை தாங்களும் அறிவீர்கள். தங்களது இயக்க முன்னோடிகளும் அறிவார்கள்.

தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வர உதவினேன் என்கிற ஒரே ஒரு மகிழ்வான உணர்வோடு இருந்தவன், தங்களால் ஈர்க்கப்பட்டு தங்களது இயக்கத்திலும் 1998-ஆம் ஆண்டு அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். நாடாளுமன்ற தேர்தலில் நெல்லையில் நிறுத்தப்பட்டேன்... இயக்கத்தில் சிலரின் ஒத்துழையாமையினால் தோற்கடிக்கவும்பட்டேன்.

நான் அன்று தங்கள் இயக்கத்தில் இணைந்ததை நான் சார்ந்திருக்கும் சமுதாயம் வரவேற்கவில்லை. காரணம் மெர்க்கண்டைல் வங்கி விவகாரத்தில் தாங்கள் பிரச்சினைக்கு சரிவர தீர்வு காணவில்லை என்ற உண்மை அனைவரையும் பாதித்ததால்.

இருப்பினும் நம் இயக்கத்தின் கொள்கைகளான கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டினை முழு மூச்சாக கொண்டு உண்மை உணர்வோடு மரபு மாறாமல் இயக்கத்திற்காக உழைத்து வந்திருக்கிறேன்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இயக்கத்திற்கு நான் ஊறு விளைவித்ததில்லை என்பதனை இவ்வுலகமே அறியும்.இது ஒருபுறம் இருக்க எத்தனையோ சந்தர்ப்பங்களில் தங்களை சார்ந்த சிலரே என்னை அவமானத்திற்கு உள் ளாக்கியிருக்கிறார்கள்.

அதனை தங்களுக்காகவும், இயக்கத்திற்காகவும், என் மனைவி ராதிகா சரத்குமாருக்காகவும் சில காலம் தாங்கிக் கொண்டிருந்தேன். அதையும் மீறி ஒரு கட்டத்தில் தங்களிடம் எனது உண்மையான உணர்வுகளை வெளிகாட்டியிருக்கிறேன்.

அப்பா என்று பாசத்தோடு தங்களிடம் வந்தேன். என்ன என்று கேட்டீர்கள்... சொன்னேன். எனது வேதனைகளுக் கும் நான் பட்ட காயங்களுக்கும் காரணம் தங்களது நெருங்கிய சொந்தங்களே என்பதை தெளிவாக உணர்ந்தீர்கள்.

எனினும் அவர்களை அழைத்து சுப்ரீம் ஸ்டார் தம்பி சரத்குமார் நமக்கு உண்மையானவன், உழைப்பவன், அவனது மனைவி ராதிகா நம் வீட்டுப் பெண் இருவரையும் எக்காரணம் கொண்டும் வேதனைப்படுத்தாதீர்கள் என தங்களால் சொல்ல இயலவில்லை. தங்களது சூழ்நிலை அதற்கு வழி வகுக்கவில்லை என்றே அதனை எடுத்துக் கொள்கிறேன்.

தங்களிடம் சொல்லி விட்டேன் என்பதற்காகவே என்னை எதிரியாக நடத்தத் தொடங்கினார்கள். எனது உண்மையான உழைப்பு கேலிக் கூத்தாக்கப்பட்டது.

நான் தங்களிடம் தெரிவித்த கருத்துக்கள் எல்லாம் தங்களைச் சார்ந்தவர்களுக்கு மாற்றுக் கருத்தாகவே தெரிந்ததால் அதன் பாதிப்பும் தாக்கமும் என் மனைவி ராதிகா சரத்குமாருக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து தாங்கள் மகளாக பாவிக்கும் ராதிகா சரத்குமாரையும் தங்களால் பாதுகாக்க முடியவில்லை என்பதுதான் வருத்தத்துக்குரிய செய்தி. நாங்கள் சொல்கின்ற நியாயமான கருத்துக்களும் கோரிக்கைகளும் ஏற்கப்படக் கூடாதென எங்களுக்கெதிராக பலர் செயல்படும் போது இனியும் தங்களை வேதனைக் குள்ளாக்க நான் விரும்பவில்லை.

ஆனால் சுய மரியாதை உணர்வுகளோ, கருத்துச் சுதந்திரமோ இல்லாதவன் மனிதனே அல்ல என்பது என் கருத்து. தங்களது இயக்கத்திலோ தற்போது அவற்றுக்கு வரவேற்பு இல்லை. வாய்மையும் பேசாத, வாயும் பேசாத அடிமைகளே தேவைப்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்வதுதான் எனக்கு ஒரே வழி.

இதுகாலம் வரை தங்களிடம் கற்ற அரசியல் பாடமும் என்னை வளர்த்த ரசிகர்களும் தாய்மார்களும் நண்பர்களும், கலை உலகத்தோழர்களும் என்னை சார்ந்த சமுதாயமும் தமிழக மக்களும் இனி எனது அரசியல் வாழ்க்கைக்கு துணை நிற்பர்.

தமிழக மக்கள் என்னை அவர்கள் மடியில் விழுந்த பிள்ளையை போல கருதி நான்பட்ட காயங்களுக்கு மருந்திட்டு விட்ட பணிகளை தொடர எனக்கு வழி காட்டுவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு. எனவே இன்று முதல் என்னை தங்களது இயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொள்கிறேன். தாங்கள் செய்யவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

இக்கடிதத்தையே எனது அடிப்படை உறுப்பினர் பதவிக்கான ராஜினாமாவாகவும் ஏற்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சாதிமத மொழி பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம்.
வணக்கத்து டன்,
ஆர்.சரத்குமார்.

நன்றி>இட்லிவடை
.

.
Reply


Messages In This Thread
திமுக குடும்ப அரசியல் படுத்தும்பாடு. - by Birundan - 04-10-2006, 06:45 PM
[No subject] - by kavithaa - 04-10-2006, 06:56 PM
[No subject] - by Vasampu - 04-10-2006, 07:10 PM
[No subject] - by Birundan - 04-10-2006, 07:22 PM
[No subject] - by Vasampu - 04-10-2006, 07:42 PM
[No subject] - by Birundan - 04-10-2006, 08:09 PM
[No subject] - by Vasampu - 04-10-2006, 11:40 PM
[No subject] - by தூயவன் - 04-11-2006, 03:53 AM
[No subject] - by Birundan - 04-11-2006, 08:02 AM
[No subject] - by Luckyluke - 04-11-2006, 08:46 AM
[No subject] - by Birundan - 04-11-2006, 09:11 AM
[No subject] - by Luckyluke - 04-11-2006, 09:20 AM
[No subject] - by Birundan - 04-11-2006, 09:26 AM
[No subject] - by Luckyluke - 04-11-2006, 09:43 AM
[No subject] - by Vasampu - 04-11-2006, 10:44 AM
[No subject] - by தூயவன் - 04-11-2006, 01:00 PM
[No subject] - by தூயவன் - 04-11-2006, 01:00 PM
[No subject] - by Luckyluke - 04-12-2006, 07:57 AM
[No subject] - by மின்னல் - 04-12-2006, 08:30 AM
[No subject] - by Vasampu - 04-12-2006, 08:41 AM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 01:37 PM
[No subject] - by தூயவன் - 04-12-2006, 01:38 PM
[No subject] - by Luckyluke - 04-13-2006, 06:24 AM
[No subject] - by தூயவன் - 04-13-2006, 06:48 AM
[No subject] - by Luckyluke - 04-13-2006, 07:49 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 02:23 AM
[No subject] - by Birundan - 04-24-2006, 12:45 PM
[No subject] - by தூயவன் - 04-24-2006, 02:20 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)