04-10-2006, 02:05 PM
பாடா சட்டத்தின் கீழ் கைதாகி, வேலூர் சிறையில் அடைபட்டிருந்தபோது எழுதிய நூலை வைகோ ஒருமுறை வாசித்துப் பார்த்து, அதில் உள்ள கருத்துக்கள், பேச்சுக்கள் உண்மை என்றால் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. அகில இந்தியச் செயலாளர் ராஜா அதை வெளியிட்டார். பின்னர் கட்சி சார்பில் போட்டியிடும் 10 வேட்பாளர்களும் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் ராஜா பேசுகையில்,
தமிழக பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது, வீழ்ச்சி அடைந்துள்ளது. விவசாயத் துறையின் பங்களிப்பு 18 சதவீதத்திலிருந்து 13 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு ஜெயலலிதா என்ன பதில் கூறப் போகிறார்?
வைகோவுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். வேலூர் சிறையில் ஓராண்டுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த காலத்தில் எழுதிய நூலை (ஜெயலலிதா ஆட்சியின் அடக்குமுறை ஆட்சி குறித்த நூல்) அவரே ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.
அதில் எழுதப்பட்டுள்ள பேச்சுக்கள், கருத்துக்கள் உண்மையானவை என்றால், தமிழக மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
சேது சமுத்திரத் திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என்று பெருமை அடித்த வைகோ இப்போது அந்தத் திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் ஜெயலலிதாவோடு சேர்ந்துள்ளார்.
இப்போது சேது சமுத்திர திட்டத்தை வைகோ ஆதரிக்கிறாரா? இல்லையா? இந்த விஷயத்தில் நெஞ்சைத் தொட்டு உண்மை பேச வைகோ தயாராக இருக்கிறாரா?
பொடாவில் இருந்து வெளியே வந்தாலும் வைகோ இப்போதும் ஒரு கைதி தான். அவர் இப்போது சூழ்நிலைக் கைதியாக ஜெயலலிதாவின் பிடியில் சிக்கியிருக்கிறார்.
தங்கள் கூட்டணிக்கு பலமில்லை என்பதால் தான் தயாநிதி மாறனை விமர்சித்து தனி மனித தாக்குதலில் இறங்கியிருக்கிறார் வைகோ. அதற்கு வைகோவுக்கு கொஞ்சமாவத அருகதை இருக்கிறதா என எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் தேர்தலை ஒத்தி வைக்க எதிர்க் கட்சிகள் சதி செய்வதாக ஜெயலலிதா பேசுவது, அவருக்கு தோல்வி பயம் வந்துவிட்டதையே காட்டுகிறது என்றார்.
புரட்சிப் புயலல்ல.. புழுதிப் புயல்:
இதற்கிடையே தஞ்சாவூரில் நிருபர்களிடம் பேசிய தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் தமீமுல் அன்சாரி,
ஒரு தனியார் டிவி தன் முகத்தைக் காட்டவில்லை என்ற தரங்கெட்ட அரசியல் நடத்தும் நிலைக்கு வைகோ தள்ளப்பட்டுவிட்டார். புரட்சிப் புயல் என்று சொல்லப்பட்டவர் இப்போது புழுதிப் புயல் ஆகிவிட்டார்.
பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மனாக இருந்தவர் இப்போது எட்டப்பனாகிவிட்டார். தேர்தல் முடிந்தவுடன் அவரை ஜெயலலிதா கழற்றிவிட்டுவிடுவார். ஜெயலலிதாவைப் போய் நம்பி அங்கு போயிருக்கிறார்.
தனது கல்லூரியை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டியவர் தான் விஜய்காந்த். இவர் எப்படி ஊழலை ஒழிக்க முடியும் என்றார்.
நன்றி - தற்ஸ்தமிழ்

!
-
-