Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மாமனிதர் வ.விக்கினேஸ்வரனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்கம்!
#1
மாமனிதர் வ.விக்கினேஸ்வரனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்கம்!
(கிளிநொச்சி)
மாமனிதர் வ.விக்கினேஸ்வரனின் இறுதி வணக்க நகழ்வு கிளிநொச்சியில் துயரவெள்ளம் பெருக்கெடுக்க இடம் பெற்றிருக்கின்றது. கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து அவரது புகழுடல் முல்லைத்தீவக்கு இறுதி வணக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படுகின்றது.

கிளிநொச்சி தேசிய எழுச்சிச் செயலணியின் செயலாளர் திரு த.பிரபாகரன் தலைமையில் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அலையெனத் திரண்டிருந்தனர்
பாண்ட் வாத்திய இசையுடன் அணிவகுப்பு மரியாதையுடன் பண்பாட்டு மண்டபத்துக்கு புகழுடல் எடுத்துவரப்பட்டது.

பொதுச் சுடரினை தளபதிகளான கேணல் ஜெயம், கேணல் தீபன் ஆகியோர் ஏற்றி வைத்தனர்.

ஈகச்சுடரினை மாமனிதர் விக்கினேஸ்வரனின் துணைவியார் ஏற்றி மலர் மாலை அணிவித்தார்.
அஞ்சலி உரைகளை முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன், கவிஞர் புதுவை இரத்தினதுரை, சமாதான செயலகத்தைச் சேர்ந்த இளந்திரையன், தமிழ் மக்கள் பேரவை செயலாளர் கௌரி முகுந்தன், தீவக தேசிய எழுச்சிப் பேரவைத் தலைவர் கணேசலிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவனேசன் ஆகியோர் நிகழ்த்தினர்.
இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலங்து கொண்டிருந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் இறுதி நேரத்தில் பண்பாட்டு மண்டபத்துக்கு வருகை தந்து மலர் வளையம் சாத்தி, இறுதி வணக்கத்தை செலுத்தினார்.

பெருந்திரளான மக்கள் திரண்டு கண்ணீர் மல்க, அழுகின்ற பேரோசை வானைத் தொட இறுதி மலர் வணக்கம் செலுத்தினர்.
Reply


Messages In This Thread
மாமனிதர் வ.விக்கினேஸ்வரனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்கம்! - by SANKILIYAN - 04-10-2006, 09:24 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)