Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்கள் ஆனந்த வடிவினர்
#2
சாயி அருளமுதம்


உங்கள் இதயத்தில் எப்பொழுது புதிய உணர்வு வருகிறதோ அப்போது பிறக்கிறது புதிய வருடம்.

சத்தியம் எங்கிருக்கிறதோ அங்கே அமைதி என்பது இருக்கும். சத்தியத்துடன் தர்மம் என்கிற அறவழியும் இணைகிறது.

நீ கடவுளை நேசிப்பதாகச் சொல்லலாம். ஆனால் நீ உனக்குக் கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும். இறைவன் உன்னை நேசிக்கிறாரா என்று.

இயற்கை என்பது ஒரு கண்ணாடி. தனி மனிதன் அதில் தொ¢யும் பிரதிபலிப்பு. அவன் என்ன செய்தாலும் அதன் கண்ணாடியில் தொ¢யாமல் போகாது. நீ கடவுளை மகிழ்ச்சியுறச் செயதிருந்தால் கண்ணாடியில் தொ¢யும் பிரதிபலிப்பு பொஸிட்டிவ் ஆக இருக்கும்.

உலகமே ஒரு ஹாஸ்பிட்டல். மனிதகுலம் பலவகை நோய்களால் பாதிக்கப்பட்டு வருந்துகின்றது. உடலால், மனதால், மனோதத்துவத்தால் எனப் பலவகை நோய்களால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு தெய்வ சிந்தனை என்கின்ற மருந்து தான் தேவைப்படுகின்றது.

கடவுள் உன்னுள் உறைகிறார் என்பதை நீ பு¡¢ந்து கொண்டாயானால், தவறான, தீய செயல்களில் இறங்குவதற்கு என்றுமே உனக்குத் துணிவு வராது.

கவலையில்லாமல் இருக்க வேண்டுமானால் பொறுமையை முதலில் வளர்த்துக்கொள்ளுதல் வேண்டும். தீய எண்ணங்களை எப்போதும் உங்களுக்குள் நுழைய விடாதீர்கள்.

வாழ்க்கை முழுவதும் கவலையிலேயே உழல்கிறீர்கள். பிறப்பு ஒரு கவலை. இவ்வுலகில் வாழ்வதே கவலை. குடும்பம் ஒரு கவலை. குழந்தைகள் ஒரு கவலை. வெற்றி ஒரு கவலை. தோல்விகள் ஒரு கவலை நோய் ஒரு கவலை. முதுமை ஒரு கவலை . இறப்பு ஒரு கவலை. இப்படி எல்லாமே கவலைகள்தான். இவையெல்லாம் நாமாக கற்பனை செய்துகொள்ளக் கூடியவை. நம் மனதைப் பொறுத்தவை.

உன்னுடைய கடமையை திறமையாகச் செய்வதே யோகம். உன் வாழ்நாள் முழுவதும் பிரதிபலன் எதுவும் எதிர்காராது உனது கடமையைச் செய்து கொண்டேபோக வேண்டும். மற்றவருக்கு ஏதாவது கொடுக்கும்போது கூட நீ கொடுப்பவனாகவும், அடுத்தவன் பெறுபவனாகவும் எண்ணலாகாது. இது தெய்வம் நமக்களித்த ஒரு வாய்ப்பு என்பதாகக் கருத வேண்டும்.

மனம் என்பது ஆசைகளின் மூட்டை. ஆசைகளைக் கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் உங்களுக்கு மன அமைதி என்பதே கிடையாது.

சத்தியம், தர்மம், சாந்தி இவை மூன்றும் இல்லாத போது வாழ்க்கையும் அன்பின்றிப் போகின்றது. பலனின்றிப் போகிறது. அன்பு வாழ்க்கைக்கு மிகவும் அவசியம். அன்பின்றி வாழ்பவன் வெறும் நடைப்பிணம்.
பேச்சில் இருக்கும் பிரேமை சத்யம்.
செயலில் இருக்கும் பிரேமை தர்மம்.
எண்ணங்களில் இருக்கும் பிரேமை சாந்தி.

அன்புதான் அஸ்திவாரம்.
சத்யமே சுவர்
அமைதியே கூரை.


சத்தியமும் நற் பெயரும் மட்டுமே நிரந்தரமாக இருந்து தொடரக்கூடியவை.
நற்பெயரைப்பெறுவது எப்படி?
இனிமையாகப் பேச வேண்டும்.
நல்ல விசயங்களைப் பற்றி மட்டுமே கேட்க வேண்டும்.
நல்ல செயல்களையே செய்ய வேண்டும்.
இதயம் முழுமையும் நல்ல சிந்தனைகளால் நிரப்ப வேண்டும்.

நீங்கள் எப்போதும் மனதை நம்பாதீர்கள். அது ஒரு நிலையில் நிற்காது. உடலையும் பின்பற்றக் கூடாது. அது நீர்க்குமிழி போல் அழியக் கூடியது. உன் தலைவனான மனச்சாட்சியை மட்டுமே பின்பற்று.

O

உடல் ஒரு மரமேயாகும்.
வேர் தன்னை நேசிப்பது.
கிளைகள் - ஆசைகள் (பல பக்கங்களிலும் வி¡¢யும்)
இயல்புகள், மேன்மைகள் பிறவிக் குணத்தை அடிப்படையாகள் கொண்ட பழக்க வழக்கஙகள் முதலியவை - மலாகள்.
இன்பமும் துன்பமும் அதன் - கனிகள்.

தீமையும் கூட உண்மையில் நன்மையின் மறுபக்கமே.
அது எல்லா நேரத்திலும் தீமையாக இருப்பதில்லை. அது எப்போதும் அற்ப ஆயள் உடையதே.

அதர்மமானது தர்மத்தை வளர்த்துக்கொள்ள மனிதனுக்குத் து¡ண்டுகோளாக உள்ளது.

கருணையின் மூல வித்து துன்பமே.

தவறும் துன்பமும் இல்லையேல் மனிதன் கல்லாகவோ கட்டையாகவோ மாறி விடுவான்.

எண்ணங்களின் குவியலே மனிதன்.

ஒரு குறிப்பிட்ட நோக்கம் இல்லாமல் மனிதன் ஒரு செயலில் ஈடுபடுவதில்லை.

வா¡ழ்வை பலவீனப்படுத்தி அணைத்துவிடும் சில செயற்பாடுகளால் சாவு விளைகிறது
இறப்பு ஆத்மாவைப் பாதிப்பதில்லை.
இறப்பு என்பது பிறப்பின் இன்னொரு கட்டமே.

தை தை தை தை தை பொம்மையே.
தமாஷ¥க்காக ஆடும் பொம்மையே
அழகு, பிராயம், ஆற்றல் பற்றிக் கர்வங் கொள்ளாதே.
தள்ளாடும் முதமைப்பருவம் வரப்போவதை மறவாதே.
உடல் அசைய முடியாது, கண்ணால் பார்க்க முடியாது
தலையும் நரைத்து விடும், தோலும் சுருங்கிவிடும்
குரங்கென்று அனைவரும் உன்னை கேலியும் செய்வர்
தை தை தை தை தை தை பொம்மையே.

O

ஓ ஐ£வனே, கண்ணில் கண்டவற்றைப் பற்றிக் கவலைப்படுகின்றாய்
கண்ணில் காணாதவையே இவற்றின் காரணம் என்றறிவாய்
காணாதவற்றை இல்லையென்று நீ மறுக்கின்றாயே
காணாதவையே, அனுபவங்களின் காரணம் என்று நீ அறிவாயோ.

விளக்கு வீட்டுக்கு ஒளி அளிக்கிறது. ஆனால் அதன் காலடியில் இருள் சூழ்ந்திருக்கிறது.

உடல் நீண்ட கண்ணாடிக் குழல் போன்றது. அதன் உள்ளே உள்ள உள்ளம் நிம்மதியில்லாமல் மாறிக் கொண்டே இருக்கிறது.

ஆணவம் மடிந்தொழியும் போது அனைவரும் நண்பர்களே.

மழை பெய்யாத மேகம் விண்ணில் அலைந்தபடி காற்றின் கருணைக்காகக் கா¡த்திருக்கிறது.

கனவில் கண்ட கதைக் காட்சியைப் போல் ஒருநாள் இந்தப் புலன் கவர்ச்சிகள் யாவும் மறைந்துவிடும்.


கவலை வேண்டாம்

பிறவி ஒரு கவலை
உலகில் வாழ்வது ஒரு கவலை
குடும்ப வாழ்க் கை ஒரு கவலை
சாவு ஒரு கவலை
பொருளீட்டல் ஒரு கவலை
தோல்வி ஒரு கவலை
செயல்கள் ஒரு கவலை
கஷ்டம் ஒரு கவலை
சுகமும் ஒரு கவலை
மர்மமும் ஒரு கவலை
அனைத்தும் கவலைகளே
சர்வேசுவரனை நினைந்து கவலையுற்றால் இக்கவலைகள் எல்லாம் மறைந்துவிடும்.

நீ இல்லையென்று கூறுவது உண்மையில் இருக்கிறது.
நீ இருக்கிறது என்று கூறுவது உண்மையில் இல்லை.
இருப்பது இறைவன் மட்டுமே.
உண்மையில் உலகம் என்ற இருப்பு இல்லை.

O

ஓ மனமே நீ ஒன்றும் கேட்காதே
கேட்க கேட்க தாமதமாகும்.
எவரெவர்க்கு எதெது எப்போது கிடைக்க வேண்டுமோ அப்போது கிடைக்கும். அது பூர்வ¦ஐன்ம பாப புண்ணியத்தைப் பொறுத்தது.

உலக சம்பந்தமான எதிலும் நமக்கு மகிழ்ச்சி இராது.
மனதின் உள்ளே வாழ்ந்திருக்கலாம்.

மனதில் உள்ள மாசுகளைத் துடைத்துவிடு. புரிசுத்தமான, நல்ல எண்ணங்களை குடிகொள்ளச் செயவதற்காக மனதில் உள்ள மாசுகளைத் துடைத்துவிடு. அதன்பின் ஞான தா¢சனம் பெறுவாய்.

அறியாமை மிகுந்தவர் அகந்தை அடைகிறார். ஆசை மிகுந்தவன் துன்பத்திலிருந்து தப்ப இயலாது.

துக்கப்படுபவனுக்கு ஆனந்தமில்லை.
ஆனந்தமில்லாதவன் மனிதனே அல்ல.

உறுதி கொண்டபின், நிறைவேறும்வரை உறுதியைக் கைவிடாதே.
முடிவெடுத்தபின், நினைத்தது கிடைக்கும்வரை மனம் தளராதே.
வரம் கேட்டாய், கிடைக்கும்வரை இடத்தைவிட்டு நகராதே.
நச்சா¢ப்புத் தாங்காது அருள் வழங்கட்டும் அல்லது உடல் உணர்வு அழியும்வரை கேட்டுக் கொண்டேயிரு.
அருள் வேண்டும், அதுவே வேண்டும், அதுதான் வேண்டும்.
இல்லாது திரும்புதல் பக்திக்கு அழகல்ல.

தெய்வத்தின் நிழலே உனக்குச் சிறந்த பாதுகாப்பு.
இறைவன் உனக்காக எதுவும் செய்வார்.

நிதானமே அமைதியின் மந்திரம்.

உண்மையில் இறைவன் தண்டிப்பதில்லை. உனது கெட்ட குணங்கள் உன்னைத் தண்டிக்கின்றன. உனது நற்குணங்கள் உன்னைக் காப்பாற்றுகின்றன.

ஒரு பெண் நெருப்பைப் போன்றவள். அவளைப் பார்வையாலோ, சொல்லாலோ, செயலாலோ துன்புறுத்துவது பாவம்.

மனதுக்கு மனம் சாட்சி
தேகத்துக்கு குணம் சாட்சி
அனைத்துக்கும் கடவுள் சாட்சி
அறிவிலிக்கு முட்டாள்த் தன்மையே சாட்சி.


காக்கைகள் கரையும் போது குயில் பேசாதிருக்கும்



--------------------------------------------------------------------------------

என்னை நினைவில் கொண்டிருப்பவனை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்
- ஸ்ரீ சாயி சத் சரித்திரம் அத். 40
¿ý§È ¦ºöÅ£÷ «¨¾Ôõ þý§È ¦ºöÅ£÷
Reply


Messages In This Thread
நீங்கள் ஆனந்த வடிவினர் - by Magaathma - 04-09-2006, 01:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)