Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
யாழில் கிளைமோர்த் தாக்குதல்- மூதூரில் மோதல்: படைத்தரப்பில் ஒ
#1
யாழில் கிளைமோர்த் தாக்குதல்- மூதூரில் மோதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி
[சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2006, 17:44 ஈழம்] [ம.சேரமான்]
யாழ்ப்பாணம் நீர்வேலியில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர்.


சிறிலங்கா இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து இன்று மாலை 4.40 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மூதூர் கிழக்கில் பாத்தியடி இராணுவ முகாமில் நடைபெற்ற நேரடி மோதலில் ஒரு படையினர் கொல்லப்பட்டதாகவும் 4 படையினர் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடந்துள்ளது.

மூதூர் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க கூறியதாவது:

எமது கண்காணிப்பு நிலைகள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றார்.

ரொய்ட்டர் செய்தி நிறுவனத்துக்கு விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் இது பற்றி கூறுகையில்,

மூதூர் கிழக்கில் எமது நிலைகள் மீது இன்று காலை சிறிலங்கா இராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். 50 மி.மீ மோட்டார்களைக் கொண்டு இத்தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதலில் எமது போராளிகள் காயமடையவில்லை என்றார்.

http://www.eelampage.com/?cn=25361
Reply


Messages In This Thread
யாழில் கிளைமோர்த் தாக்குதல்- மூதூரில் மோதல்: படைத்தரப்பில் ஒ - by Naasamaruppan - 04-08-2006, 12:38 PM
[No subject] - by Naasamaruppan - 04-08-2006, 12:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)