04-07-2006, 01:34 PM
Selvamuthu Wrote:ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா இவையெல்லாம் நாம் புகுந்த இடங்கள். இதிலே எது பெரிது எது சிறிது என்று நாம் வாதிப்பதும், பெருமை கொள்ளவதும் பொருத்தமற்றது. அவுஸ்திரேலியா பெரிய நாடு. அங்கே எல்லாமே பெரியன. அதோடு ஐரோப்பாவை ஒப்பிடுவதும், கிண்டலடிப்பதும் எமக்குத் தேவையா?
"செய்யும் தொழிலே தெய்வம்" என்று தமிழில் ஓர் அருமையான பழமொழி இருக்கின்றது. கடை நடாத்துபவர்கள், பெற்றோல் நிலையம் நடாத்துபவர்கள், மதுபானக்கடைகள் வைத்திருப்பவர்கள் என்று அவர்களின் தொழிலைக்கொண்டு தரம்பிரித்தல் நாம் இன்னமும் முன்னேறவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
எம் முன்னோர் விட்ட தவறுகளை இளைஞர்கள் மீண்டும் விடாமல் இருக்கவேண்டும். தாயக வளர்ச்சிக்கும், உறவுகளின் முன்னேற்றத்திற்கும் புலம் பெயர்ந்த எம்மால் நல்லன எதுவும் செய்யமுடிந்தால் அதனை முழுமனத்தோடு அனைவரும் செய்யவேண்டும். இதுவே எனது அன்பான வேண்டுகோள்.
செல்வமுது அவர்களுக்கு ஒரு விளக்கம்,
நான் கடை வைதிருப்பவரையோ அன்றி பெற்றோல் நிலயம் வைதிருப்பவரையோ குறைத்து எதுவித கருத்தையும் தெரிவிக்கவில்லை, இவற்றைப் போன்றது ஒரு வியாபாரமாகவே அதுவும் மிகவும் லாபம் தரும் வியாபாரமாக ஐரோப்பாவில் கோவில்கள் இருகின்றன என்பதயே சொன்னேன்.இவை ஒரு பொதுவான பொது அமைபின் கீழ் வர வேண்டும் என்று பிரித்தானியாவில் எடுக்கப் பட்ட முயற்ச்சிகளுக்கு சில கோவில்களில் என்ன நடந்தது என்பது எலோருக்கும் தெரிந்த விடயம்.

