Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழீழக் காணிச்சட்டமும் புலம்பெயர் மக்களின் காணிகளும்:
#53
இங்கே தங்கள் காணிகள், சொத்துக்கள் மட்டில் பலருக்கு இருக்கும் "ஈர்ப்பை" நான் கொச்சைப்படுத்தவில்லை. பலர் விசயம் புரியாமல் சகட்டு மேனிக்கு எதிர்ப்பதாகவும் தெரிகிறது.

நிற்க,
போராட்டத்தேவைக்காக எதையும் செய்தே ஆகவேண்டிய நிலை அவ்வப்போது வரும். கடந்த காலங்களில் புலிகள் எடுத்த தீவிரமான (கவனிக்க இப்போது வந்த காணிச்சட்டம் அப்படியானதன்று) நடவடிக்கைகளில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் அது தேச விடுதலைக்குத்தான் என்ற புரிதல் இருந்தது. இந்தக் காணிச் சட்டத்தால் புலம்பெயர்ந்தவர்கள் எதை இழக்கிறார்கள் என்பது எனக்கு இன்னும் புரியாமலுள்ளது. ஆனால் களத்தில் வாழ்ந்த மக்கள் இப்படியான நடவடிக்கையினால் தமது வாழ்வாதாரத்தைக்கூட அர்ப்பணித்தார்கள்.

ஜெயசுக்குறு தொடங்கியபோது பல உழவு இயந்திரங்கள் புலிகளால் எடுத்துச் செல்லப்பட்டன.( கவனிக்க, வாங்கிச் செல்லப்படவில்லை). முத்தையன்கட்டுப்பகுதியில் மட்டும் பதினாறு உழவியந்திரங்கள் இவ்வாறு புலிகளால் கொண்டுசெல்லப்பட்டன. அவையனைத்தும் விவசாயத்துக்கான உழவுஇயந்திரங்கள். ஆறுவருடங்களின்பின்தான் அவற்றுக்கான பணம் (வட்டியுடன்) கொடுக்கப்பட்டது. அக்குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை இழந்து சடுதியான பின்னடைவைச் சந்தித்தன. ஆனால் அது தவிர்க்கவே முடியாத நிலை. யுத்தத்துக்கு வாகனங்களற்ற நிலையில் அதுதான் செய்யப்பட வேண்டியது.

இதைப்போல தனியார் வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டன. வாகனச்சாரதிகள் கட்டாயம் முன்னணிக் களப்பணி செய்தாக வேண்டும். (இதில் பல வாகனச்சாரதிகள் வீரச்சாவடைந்தார்கள்). மக்களின் வாகனங்கள் களப்பணியில் சிதறிப்போகும் அல்லது சேதமாகும். பல வீடுகள், காணிகள் கூட புலிகளின் முகாம்களாக இருக்கத்தக்கதாக அதற்குச் சொந்தமான நிறையப்பேர் வாடகை வீட்டில் குடியிருந்தார்களே? இவற்றிலெல்லாம் போராளி - மாவீரர் குடும்பங்களென்று கூட பார்ப்பதில்லை.

அந்தச் சந்தர்ப்பத்திலெல்லாம் புலிகள் விமர்சிக்கப்பட்டதில்லை. அங்கிருந்த மக்கள் அதைச் செய்யப்போவதுமில்லை. அவர்கள் புலிகளை வெருட்டியதுமில்லை. நீ ட்றக்ரறைப் பறிச்சா எங்கட பிள்ளையள் சண்டைபிடிக்க வராதுகள் எண்டு சொல்லியதில்லை.

இப்படி எல்லாச் சந்தர்ப்பத்திலும் அனைத்துச் சொத்துக்களும், (உயிர்களும்கூட) தேசப்பாதுகாப்புக்கென்று பயன்படுத்தப்பட்டன. கட்டாயப்படுத்திக்கூட அவை பெறப்பட்டன. அதற்கான உரிமையும் தார்மீகத் தகுதியும் புலிகளுக்கு முற்றிலுமுண்டு. இப்போது ஏற்படுத்தப்பட்ட காணிச் சட்டம்கூட அப்படியானது தானென்றாலும் அதில் கடுமையான எதுவுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

சரி. இதுவரைகாலமும் இந்தப் புலம்பெயர்ந்தவர்களின் காணியை யார் பார்க்கிறார்கள்?

அவர்களது இரத்த உறவுகள்தான் என்றால் அவர்களே அதைக் கையாழ்வதற்கு இப்போதைய சட்டத்தில் வழியுண்டுதானே? அப்படியில்லாமல் வேறு யாரையாவது வாடகைக்கு விட்டிருக்கிறார்களா? அந்தச்சந்தர்ப்பத்தில் இவர்கள் திரும்பிப்போகும்வரை அவ்வாடகை இவர்களுக்குக் கிடைக்காது என்பதைத் தவிர வேறென்ன சிக்கல்?

காவடி கேட்ட மூன்று கேள்விகள்தான் எனக்கும் தொக்கு நிற்கின்றன.
Reply


Messages In This Thread
[No subject] - by sOliyAn - 04-06-2006, 12:23 AM
[No subject] - by Nitharsan - 04-06-2006, 12:32 AM
[No subject] - by Birundan - 04-06-2006, 01:18 AM
[No subject] - by sOliyAn - 04-06-2006, 01:25 AM
[No subject] - by nirmalan - 04-06-2006, 02:06 AM
[No subject] - by அருவி - 04-06-2006, 03:46 AM
[No subject] - by KING ELLALAN - 04-06-2006, 05:38 AM
[No subject] - by தூயவன் - 04-06-2006, 06:14 AM
[No subject] - by தூயவன் - 04-06-2006, 06:23 AM
[No subject] - by காவடி - 04-06-2006, 07:09 AM
[No subject] - by Birundan - 04-06-2006, 10:19 AM
[No subject] - by காவடி - 04-06-2006, 01:13 PM
[No subject] - by Vasampu - 04-06-2006, 01:53 PM
[No subject] - by தூயவன் - 04-06-2006, 02:01 PM
[No subject] - by தூயவன் - 04-06-2006, 02:09 PM
[No subject] - by SUNDHAL - 04-06-2006, 02:35 PM
[No subject] - by காவடி - 04-06-2006, 03:49 PM
[No subject] - by காவடி - 04-06-2006, 04:06 PM
[No subject] - by Netfriend - 04-06-2006, 05:23 PM
[No subject] - by Birundan - 04-06-2006, 06:13 PM
[No subject] - by narathar - 04-06-2006, 06:54 PM
[No subject] - by Netfriend - 04-06-2006, 07:18 PM
[No subject] - by Birundan - 04-06-2006, 07:49 PM
[No subject] - by narathar - 04-06-2006, 08:12 PM
[No subject] - by Nellaiyan - 04-06-2006, 08:30 PM
[No subject] - by kurukaalapoovan - 04-06-2006, 08:37 PM
[No subject] - by Nellaiyan - 04-06-2006, 08:59 PM
[No subject] - by Birundan - 04-06-2006, 09:01 PM
[No subject] - by narathar - 04-06-2006, 09:18 PM
[No subject] - by sOliyAn - 04-06-2006, 10:42 PM
[No subject] - by sOliyAn - 04-06-2006, 10:59 PM
[No subject] - by sOliyAn - 04-06-2006, 11:19 PM
[No subject] - by Vasampu - 04-07-2006, 12:04 AM
[No subject] - by காவடி - 04-07-2006, 12:05 AM
[No subject] - by காவடி - 04-07-2006, 12:10 AM
[No subject] - by Vasampu - 04-07-2006, 12:17 AM
[No subject] - by Jude - 04-07-2006, 02:14 AM
[No subject] - by தூயவன் - 04-07-2006, 03:51 AM
[No subject] - by Jude - 04-07-2006, 04:49 AM
[No subject] - by தூயவன் - 04-07-2006, 04:56 AM
[No subject] - by narathar - 04-07-2006, 08:58 AM
[No subject] - by narathar - 04-07-2006, 09:17 AM
[No subject] - by narathar - 04-07-2006, 09:41 AM
[No subject] - by அகிலன் - 04-07-2006, 09:50 AM
[No subject] - by அகிலன் - 04-07-2006, 09:57 AM
[No subject] - by அகிலன் - 04-07-2006, 10:10 AM
[No subject] - by narathar - 04-07-2006, 11:16 AM
[No subject] - by Jude - 04-07-2006, 11:49 AM
[No subject] - by narathar - 04-07-2006, 11:59 AM
[No subject] - by nallavan - 04-07-2006, 12:04 PM
[No subject] - by Jude - 04-07-2006, 12:40 PM
[No subject] - by nallavan - 04-07-2006, 12:47 PM
[No subject] - by narathar - 04-07-2006, 12:54 PM
[No subject] - by Sujeenthan - 04-07-2006, 01:18 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-07-2006, 01:42 PM
[No subject] - by kurukaalapoovan - 04-07-2006, 05:01 PM
[No subject] - by kurukaalapoovan - 04-07-2006, 05:04 PM
[No subject] - by kurukaalapoovan - 04-07-2006, 05:12 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-07-2006, 05:45 PM
[No subject] - by kurukaalapoovan - 04-07-2006, 06:36 PM
[No subject] - by nallavan - 04-08-2006, 01:35 AM
[No subject] - by Birundan - 04-08-2006, 08:45 AM
[No subject] - by kurukaalapoovan - 04-08-2006, 08:53 AM
[No subject] - by Birundan - 04-08-2006, 08:58 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)