04-07-2006, 09:57 AM
Vasampu Wrote:சட்டங்கள் என்பது மக்களுக்காக உருவாக்கப்படுவதே. சட்டங்களுக்காக மக்கள் இல்லை. புலம் பெயர்ந்த நாரதர் காணிகளை விட்டுவிட்டு ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள் அங்கேயே இருந்து அதை காப்பாற்றி இருக்கலாமென கேட்பது வேடிக்கை. இன்று இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து வந்ததினால்த்தான் போராட்டம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா மக்களும் அங்கிருந்திருந்தால் செம்மணிகள் தான் மிஞ்சியிருக்கும். அத்துடன் இப்படியான சட்டங்களினால் எதிர்காலத்தில் தாயகத்தில் தமது முதலீடுகளைப் போட எண்ணியிருந்தவர்களும் அதனை வேறு இடங்களுக்கு மாற்றவே இது இடம் அளிக்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் புலிகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கவே இது வழி வகுக்கும்.
என்ன நாட்டு மக்களின் வளங்களை நாட்டுக்காக பயன் படுத்துதல் இடைவெளியை அதீகரிக்கும் ஆக்கும்.
தாயகத்தில் முதலீடு போடுபவர் நாட்டில்கால் பதிக்காமல் முடியாது அங்கு உங்களின் முதலீடு இருக்குமானால் நீங்கள் அங்கும் வாழ்வதாகவோ இல்லை குடியாக கொள்ளப்படும்.
10 வருடங்கள் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் காணிகள்தான் தனீட்சையாக கையகப்படுத்தபடும் என்பதுதான் சட்டம்.
உங்கள் காணிகள் உங்களால் பாவனைப்படுத்தபடுவதாக இருந்தாலும் கையகப்படுத்தப்படும் எனும் புதிய சட்டம் இயற்றாமல் இருந்தால் சரி. அது வரை உங்கள் காணிகளுக்கு ஆபத்து கிடையாது.
:::::::::::::: :::::::::::::::

