04-07-2006, 09:17 AM
Vasampu Wrote:சட்டங்கள் என்பது மக்களுக்காக உருவாக்கப்படுவதே. சட்டங்களுக்காக மக்கள் இல்லை. புலம் பெயர்ந்த நாரதர் காணிகளை விட்டுவிட்டு ஏன் புலம்பெயர்ந்து வந்தீர்கள் அங்கேயே இருந்து அதை காப்பாற்றி இருக்கலாமென கேட்பது வேடிக்கை. இன்று இவ்வளவு மக்கள் புலம்பெயர்ந்து வந்ததினால்த்தான் போராட்டம் இவ்வளவு வளர்ச்சியடைந்துள்ளது. எல்லா மக்களும் அங்கிருந்திருந்தால் செம்மணிகள் தான் மிஞ்சியிருக்கும். அத்துடன் இப்படியான சட்டங்களினால் எதிர்காலத்தில் தாயகத்தில் தமது முதலீடுகளைப் போட எண்ணியிருந்தவர்களும் அதனை வேறு இடங்களுக்கு மாற்றவே இது இடம் அளிக்கும். இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் நிச்சயம் புலிகளுக்கும் புலம் பெயர் மக்களுக்கும் இடையில் இடைவெளி அதிகரிக்கவே இது வழி வகுக்கும்.
ஆகா வசம்பரே,
சட்டங்கள் என்பது மக்களிற்க்கானது என்று கூறிக் கொண்டு என்ன எழுதுகிறீர்.தமிழ் ஈழத் தனியரசு காணிகளை எடுப்பது தனியாரிடம் இருந்து.அரசென்பது மக்களிற்கானது,அது பரந்து பட்ட மக்களின் நலனுக்காக இயங்குவது.அதனாலயே புலத்தில் உள்ள அரசுகளுக்கும் எவரது காணியையும் சுவீகரிக்கும் அதிகாரம் இருக்கு.ஒரு தேசிய பாதுகாப்பிற்குத் தேவயான காணியை சுவீகரிக்க எந்த அரசிற்கும் உரிமை உண்டு.மேலும் என்னைப் பற்றிக் கதைதீர் ஓம் நான் புலம் பெயர்ந்தவன் தான் அதற்காக எனது சுய நல நோக்கில் இருந்து சிந்திப்பதுவோ ,செயற்படுவதோ கிடயாது.இதை முன்னரும் பல முறை சொல்லி இருகிறேன்,அது தான் உமக்கும் ,எனக்கும் உள்ள வித்தியாசம்.எனக்கு ஒரு பாதிப்பு வருகிறது அதற்காக நான் தமிழ் ஈழ தனியரசின் நலங்களுக்கு எதிராக சொல்லவோ செயற்படவோ மட்டேன்.ஊரோடு ஏற்பட்ட இழப்பு எனக்கும் ஏற்படுகிறது என்றே எண்ணுவேன்.
தமது இன்யிரைத் தானமாகக் கொடுப்பவர்களுக்கு ஏற்பட்ட இழப்பிலும் எனது இழப்பு என்பது ஒரு துரும்பே.அவர்களே போராட்டதின் பலன்களை பெறுவதற்கு முதலில் உரித்தானவர்கள்.
முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் நாங்கள் எல்லோரும் புலம் பெயர்ந்தது எமது சுய நலங்களைப் பாதுகாக்க,போராட்டதுகு உழைதுக் கொடுக்க என்று பொய் சொல்லதீர்கள்.போராட்டதிற்குக் கொடுத்தோம் தான் ஆனால் முதலில் எம்மது சொந்த நலங்களைப் பாது காத்தோம்.
ஆனால் தமது உயிரைக் கொடுத்தவர்கள் தமது வாழும் உரிமையை,போராட்டதிற்காக கொடுத்தார்கள்,இன்றும் கொடுப்பதற்குத் தயாராக இருகிறார்கள்.அவர்களை இழந்தவர்கள் நிலயை யோசித்துப் பாருங்கள்?இவர்கள் எதற்காக இதனைச் செய்தனர்?இவர்களின் இறப்புக்கு அர்த்தம் இல்லயா?தமிழ் ஈழ அரசை மற்றவன் போராடி அமைக்கட்டும்.அதன் பயனை நாம் பின்னர் வந்து அனுபவிப் போம் என்பது கடைந்தெடுத்த போக்கிரித்தனம் இல்லயா?உங்கள் மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.

