04-07-2006, 08:58 AM
sOliyAn Wrote:Quote:எனது பாட்டன்,பூட்டனது நிலம் என்று கூறுபவர்கள் ஏன் வெளிகிட்டீர்கள் அங்கயே இருந்திருக்கலாமே,உங்கள் நிலத்தை மீட்க போராடி இருக்கலமே? இல்லை உங்கள் மண் மீது உங்களுக்கு பிணைப்பு வேண்டும் என்றால் மீண்டும் செல்வது தானே? நீங்கள் செல்லும் போது உங்களுக்கு அந்தக் காணிகள் வழங்கப்படும்.
ஓம் நாரதரே! உப்பிடி கேள்வி கேட்க எனக்கும் வரும்.. ஆனா, உதுக்கு மேலயும் நிறைய கேட்கலாம்.. ஆனா. அது நானே என்னைக் கொச்சைப்படுத்துவதுபோல..
இன்றைக்கு மேடைகளிலே முன்னுக்கு நிற்பவர்கள் அந்தந்த நாட்டு பிரசைகளாக இருக்கலாம்.. ஆனால் நான் 22 வருடங்களாக ஏன் இலங்கை கடவுச்சீட்டில் இருக்கவேணும்.. காரணம் இங்கே அவசியமற்றது.
பிருந்தன் கூறியவாறு சுதந்திர தமிழீழத்தில் இப்படியானதொரு சட்ட அமுலாக்கம் ஏற்படின் வரவேற்கத்தக்கதே! நாரதரே.. இன்னும் ஒரு கேள்வி.. 84ம் ஆண்டளவில் எந்த அப்பன் ஆச்சி தமது பிள்ளைகளை மனமுவந்து போராட்டத்துக்கு அனுப்பினார்கள்? அப்பு ராசா.. இதுகளுக்கால நீயாவது ஓடித் தப்படா என்று சொல்லி வெளியேற்றியதுதான் உண்மை.. அப்படி வெளியேறியவர்களில் பலர்.. 10 வீதமல்ல.. பலர் இன்றும் தாயகப் பற்றுடன் வாழ்கிறார்கள். தாயகத்துக்கு தங்களாலான பங்களிப்புகளை வழங்குகிறார்கள் என்பதுதான் உண்மை. சொத்து இன்று வரும்.. நாளை போகும்.. அது பெரிய விடயமல்ல.. அன்று 100 டொலருடன் புலம் பெயர்ந்தவர்கள்தான் தங்களது திறமையால் பல்வேறு துறைகளிலே குறிப்பிடக்கூடிய வகையில் முன்னேறியுள்ளார்கள்.
எனது கருத்தாடலின் முக்கிய பொருள்.. புகலிட தமிழர்களதும் தாயகத்துக்குமான ஒரு உரிமைப் பிணைப்பாக உள்ள சொத்து ஏன் கைமாற வேண்டும்.. அதற்கு என்ன அவசியம் இப்போது.. அதுதான்.
மற்றும்படி.. சொத்தின் பெறுமதிய புகலிடத் தமிழர்கள் உயர்த்துகிறார்களாம்.. யதார்த்த உண்மை தெரியாத அலம்பல் இது.. தாயகத்திலுள்ள உறவுகளை விசாரியுங்கள்.. போராட்டம் வெடிக்கப் போகிறது என்ற பயத்தில் சொத்துகளை வாங்க அங்கே ஆட்களில்லை.. அதனால் சொத்தின் பெறுமதி குறைந்துகொண்டு போகிறது என்பதுதான் உண்மை.
சோழியன்,
சொத்து கைமாறுவதாக எங்கே அந்த செய்தியில் கூறப்படுள்ளது.உங்களுடய சொத்து உங்களுடனயே இருக்கும்.அதைப்பராமரிப்பது ,வளப்படுதுவது தமிழ் ஈழ அரசைச் சாரும்.அரசென்பது மக்களுக்கு ஆனது,அது தனி நபர்களின் சொத்து அல்ல.குடியிருக்க காணி இன்றி,அல்லலுறும் மக்களுக்கு அந்தக் காணிகள் பயன் பெற்றால், அல்லது தருசு நிலங்களாக கவனிப்பாரற்றுக் கிடக்கும் நிலங்கள் பயிர் செய்யப்பட்டு பாவனைக்கு வந்தால் தமிழ் ஈழத்திற்கும்,உங்களுக்கும் பயன் பெறும் தானே.அதைதானே இந்த சட்டம் வழி விடுகிறது.மேலே காவடி கேட்டது போல் நீங்கள் கிலேசம் அடைவதற்கான காரணம் என்ன?
மேலும் இன்று எம்மில் பலர் எங்களுக்கு என்று ஒரு சேதாரம் வரப் போகுது என்றவுடன் மட்டுமே போரட்டத்தை விமர்சிகிறோம்.இது முற்றிலும் பிழையானது.இப்படி பார்த்தால் ஒருவருமே போராடி இருக்கக் கூடாது.அப்படியானல் தமது உயிரைக் கொடையாகக் கொடுக்கும் போராளிகளும்,தமது இன்னியிரைக் கொடுத்த மாவீரரும் என்ன இழிச்சா வாயரா?அவர்கள் ஏன் தமது உயிரைக் கொடுத்தனர்?அவர்களுக்குப் பெற்றவர்கள் இல்லயா?உறவுகள் இல்லயா? அவர்கள் அழுது குளறி இருக்க மாட்டார்களா?இப்படி மனசாட்சி இன்றிக் கதைக்க எனக்கு உள்ளம் வரவில்லை.எனக்கும் சொத்துக்கள் உண்டு ,அவை பற்றிக் கவலைப் பட்டு நான் தேசிய விடுதலைப் போரட்டதிற்கு எதிராக எனக்கு ஒரு சுய பாதிப்பு வருகிறது என்பதாற்காக எனது நிலயை மாற்றப் போவதில்லை.
மேலும் தமிழ் ஈழ தனி யரசு என்பது ஒரு இரவில் ஏற்பட்டு விடாது.அது இப்படியான தொடர் படிகளினாலயே நிதர்சனமாகும்.அந்த இலக்கை அடைவதற்கான ஒரு படியே இது.

