Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி.....
#7
நெஞ்சத்தில் எமது சமூதாயத்தின் மீதான கோபத்துடனும்.. அதை சொல்லிட இடம் கிடைத்த மகிழ்வினாலும் என் உள்ளத்து உணர்வுகளை எடுத்துரைக்க வந்தேன். நடுவிருக்கும் நடுவருக்கும் அருகிருக்கும் அன்புத்தோழர்களுக்கும் முன்னிருந்து பார்த்திருக்கும் வாசகர்களுக்கும் என் இனிய வணக்கங்கள்
பெற்றோர்களுக்கும் இளம் பிள்ளைகளுக்குமிடையே இடைவெளி ஒன்று உருவாகி அது கால வளர்ச்சியில் விரிவடைவதை உணர முடிகிறது. ஆகவே இந்த இடைவெளிக்கு காரணம் பெற்றோரா? பிள்ளைகளா? சூழலா?
காலத்திற்கேற்ற கருத்து மிக்க பட்டி மன்றம் ஒன்றில் கலந்து கொள்வதையிட்டு மகிழ்வடைகின்றேன். இன்று வந்த புலத்தில் என்றால் என்ன சொந்த நிலத்தில் என்றால் என்ன பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையே மிக பெரியதொரு இடைவெளி ஏற்ப்பட்டுள்ளது. இதற்க்கு காரணம் யார்? ஏன் பிள்ளைகள் பெற்றோர் களிடமிருந்து தூரவிலகியிருக்கின்றனர்? அதற்க்கு பிள்ளைகளுக்கு இடையூறாக இருப்பவை எவை? சற்று ஆழமாக நாங்கள் சிந்திப்போமானால்... பிள்ளைகளை சரிவர புரிந்து கொள்ளாத , சமூகமும், பிள்ளைகள், பெற்றேரர்கள் வாழுகின்ற சூழலுமே காரணம். புகலிடத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நாடுகளில் மிக மிக அதிகமான கருத்து வேறுபாடுகள் ஏற்ப்பட்டுள்ளமைக்கு காரணத்தை முதலில் பார்ப்போம். அதற்க்கு பிரதான காரணம் வித்தியாசமான சூழல். நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் சூழல். எம் பெற்றோர்கள் வாழ்நத சூழல் முற்று முழுதாக வித்தியாசமான, தமிழ் சமூகத்துடன் ஒன்றித்து போயிந்த சூழல். ஆனால் நாம் வாழும் புகலிடமோ, பல்லின சமூகங்கள் நிறைந்த ஒரு பல் கலாச்சார சூழலாகும். இந்த சூழலில் பெற்றோர் நினைபது போல தமிழ் கலாச்சாரத்தை மட்டும் மனதில் வைத்த வாழ முடியுமா? பெற்றோர் ஒன்றை சொல்லி விட்டு நாம் அங்கு அப்படியா இருந்தோம் அல்லது நாம் படிக்கும் போது அப்படியா செய்தோம் என்று கேட்க்கும் நிலையில் பிள்ளை என்ன செய்ய முடியும்? அந்த காலத்திற்க்கும் அந்த சூழலுக்குமிடையே இருக்கும் வித்தியாசத்தை புரிந்து கொள்ள இந்த சமூகம் தயாராய் இல்லை. இதனால் பிள்ளைக்கும் பெற்றோருக்குமிடையே என்ன புரிந்துணர்வா வரும்? காலாச்சாரத்தின் படி பிள்ளை வாழ முடியாத சூழலை எமது தமிழ் சமூகம் புரிற்து கொள்ளததால் பெற்றோருக்கும் பிள்ளைக்கு மிடையே வாக்கு வாதமேற்ப்படுகின்றது. அந்த வாக்கு வாதம் முற்றி தாய் நாட்டில் இருப்பதாய் நினைத்து கொண்டிருக்கும் பெற்றவர்கள் பிள்ளையை அடிக்கும் போது பிள்ளையே இந்த நாட்டு சூழலில் வாழ்ந்து பழகியவன் இந்த கட்டுப்பாடுகள், மிரட்டல்கள், பேச்சுக்களை பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டி ஏற்ப்படுகின்றது. ஆனாலும் இந்த சூழல் மீண்டும் அவனை பெற்றோரும் இணைய விடாமல் செய்கின்றது. பிள்ளையிடம் ஒன்றையும் பிள்ளையைப்பற்றி பெற்றோரிடம் ஒன்றையும் வம்பு மூட்டி விடுகின்றது இந்த சூழல். அடுத்து இந்த சமூதாயம் காதலை எதிரியாயே பார்க்கும் காலம் இன்னும் மாறவில்லை எனலாம். அப்படியான சூழலில் பெற்றோருக்கு பிள்ளையின் காதல் சரியேனப்பட்டாலும் இந்த பாழாய் போன சமூகம் பல கட்டு கதையை கட்டி அவர்களுக்கும் பிள்ளைக்குமிடையே பிரச்சினையை உருவாக்கி விடும். இப்படியான சூழலை உருவாக்குவது யார்? இந்த சூழல் தானே!
இங்கே வாழும் எமக்கு தமிழ் நண்பர்களை விட வேற்று நாட்டு நண்பர்களே அதிகம் எனலாம். அப்படியிருக்கையில் நாம் எமது வழியில் இருக்க முடியாது சிலவற்றில் விட்டு கொடுத்து ஒரு புதிய கலாச்சார சூழலை நாம் ஏற்ப்படுத்த வேண்டும். அதாவது எமது கலாச்சாரங்களை கைவிடாது அதே நேரம் மற்றவர்களது கலாச்சாரங்களில் உள்ள நல்ல வற்றை உள்ளேடுத்து எமது கலாச்சாரத்திலுள்ள தீயவற்றை வெளியே விலத்தி விட்டு மற்றைய சமூகங்களுடன் ஒன்றித்து வாழ நாம் பழக வேண்டும். பிள்ளைகளை பொறுத்த வரை அவர்கள் அப்படி செய்ய முனைகளில் பெற்றோர்கள் சமூகத்தையும் கலாச்சாரத்தையும் காட்டி அவர்களது விரும்பங்களுக்கு முழுக்கு போட்டு விடுகின்றனர். இதனால் என்ன நடக்கும்? அத்தோடு மற்றைய நாட்டு நண்பர்களோடு பழகும் போது பிள்ளைகள் அவர்களைப் போலவே வாழப்பழகுவார்கள். ஒரு வெள்ளையினத்து இளைஞன் சொன்னான் " நீ எதுக்கு வேலைக்கு போறாய், அதையேன் உன் பெற்றோரிட்ட கொடுக்கிறாய்" என்று கேட்டான் அதே போல ஒரு விருந்துபசாரத்துக்கு அழைத்தான் அதற்க்கு நான் சொன்னேன் " அப்பா அம்மாட்டை கேக்கனும் என்று" அதுக்கு அவன் சிரித்தான். இப்படி நாம் வாழும் சூழல் எம்மை மாற்றும் போது பெற்றோருடுன் நாம் ஒன்றாக குதூகலிக்கவா தோன்றும்?
பக்கத்து விட்டில் இருப்பவனை யார் என்று தெரியாமல் வாழும் இந்த புகலிட வரழ்வில் ஒற்றுமையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையும் எப்படி வரும்! எம்மை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் நின்று பேச நிமிடங்கள் இன்றி உழைத்து கொண்டிருக்கும் இந்த சூழலில் என்ன நடக்கும்? <i>மற்றவனை போலவே வாழ வேண்டும் மற்றவனை போலவே இவனும் வைத்தியராக வேண்டும் என்று தங்கள் ஆசைகளை பிள்ளைகள் மீது பெற்றோர் திணிப்பதற்க்கும், அந்த மாணவன் போல் உடையணிய வேண்டும், அவன் படிக்கும் பாடமெல்லாம் படிக்க வேண்டும் என் பெற்றோரை ஆக்கினை படுத்தும் பிள்ளைகளை உருவாக்கியது யார்? இந்த சமூதாயம் தானே! இந்த சூழல் தானே! </i><b> உலக மயமாக்கலில் எல்லாம் இயந்திர மயமாக இருக்கும் போது, பிள்ளை கதைப்பதற்க்கும் இயந்திரமான கணனியே நட்பாகின்ற காலத்தில் பிள்ளைகள் மனதில் என்ன தோன்றும்.</b> இந்த உலக மயமாதலால் குடும்பங்களில் பிள்ளைக்கும் பெற்றோருக்கும் எப்படி சண்டை வருகின்றது என்று கேட்க்கும் பலர் அச்சண்டைகளுக்கு என்ன காரணம் என்றால் வாய் மூடி மெளனிகளாக இருக்கின்றனர். இந்த உலக மயமாக்கல் அனைவரையும் ஒரு பரபரப்பான சூழலில் வைத்துள்ளது. யாரே சொன்னது தான் ஞாபகத்துக்கு வருகின்றது. சூரிய ஒளியில் பிள்ளையின் முகம் பார்த்து காலங்கள் போய் மின்னொளியிலே பிள்ளையின் முகம் பார்க்கும் காலத்தில் நாம் வாழுகின்றோம்" இதலிருந்து நாம் என்ன அறிய முடிகின்றது? பிள்ளைகளை இரவிலே தான் பெற்றோர் சந்திக்கின்றனர் மற்ற நேரமெல்லாம் உழைப்பின் நிமிர்தம் அவர்கள் வீட்டுக்கு வெளியிலே நிற்க்கின்றனர். இது எதனால் இந்த உலக மயமாக்கலால் தான். இப்படியே ஏற்ப்படும் இடைவெளி எங்கே முடிகிறது கூட்டுக்குடும்பத்திலா?
 <b>அடுத்து நாம் யுத்த சூழலை நாம் எடுத்து கொண்டால் இவற்றால் பாதப்படைந்தது தாயகத்தில் இருக்கும் எங்கள் சமூதாயமே!</b> தினம் தினம் யுத்தத்தினால் இடம் பெயர்வுகளாலும், உயிர் இழப்புக்களாலும் வறுமையாலும் வாடிய பிள்ளைகளது தேவைகளை பெற்றோர் நிறைவேற்ற முடியாமல் போனதற்க்கு எது காரணம்? அதனால் ஏற்ப்பட்ட பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான நீண்ட இடைவெளி யாரால் ஏற்ப்பட்டது? இந்த யுத்த சூழலால் பிள்ளைகள் உயிரை காக்க பிறருடன் பிள்ளைகளை அனுப்பி விட்டு தனித்திருந்த பெற்றோருக்குமிடையே பிணக்கினை மூட்டியது யார்? இன்றை ய காலத்தில் <b>பெற்றோர் பிள்ளைகளிடையே முரண்பாடு வருவதற்க்கு முக்கிய காரணங்கள் என்ன? காதல், கல்வி, அளவுக்கதிகமான கட்டுப்பாடு, எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் தன்மை. இவை அனைத்துக்கும் காரணம் சூழல் இந்த சூழலுக்குள் இருப்பது வேறு எதுவுமல்ல எம்மை சுற்றி தினம் தினம் இருப்பவையே. </b>காதலலால் எப்படி இடைவெளி வருகிறது என்று பார்த்தால், காதல் என்பது இரு உள்ளங்களுக்கிடையே உள்ள உணர்வுகளின் சங்கமம் என்பார்கள். ஆனால் இந்த சமூகம் இந்த காதலர்கள் அதாவது பிள்ளைகளை வாழ விட்டதா? பள்ளியில் ஒன்றாக பழகினால், மாலை பிள்ளையின் வீட்டில் பத்தி வைப்தற்கேன்று ஒரு கூட்டமே இருக்கின்றது. ஆனால் அந்த பிள்ளை தனது காதலைப்பற்றி பெற்றோரிடம் சொல்ல முடியாமல் மனதுக்குள் அடக்கி வைக்கவும் இந்த சமூகமே காரணம் என்பதை மறந்து விடுகின்றனர். இப்படி இவர்கள் பெற்றோரிடம் சொல்லும் போது பெற்றோருக்கு பிள்ளைகள் மிது நேசமா உருவாகும்? அதை விட இன்னோன்று பத்து பேர் கொண்ட குழுவில் இரு மாணவர்கள் புகை பிடித்தால் இந்த அதை பார்த்தவர்கள் என்ன சொல்லுவார்கள், அதில் நின்ற பத்து பேரும் புகை பிடிப்பதாய் பத்து பேரின் வீட்டிலும் அதற்க்கு மேலாய் ஊர் எல்லாம் சொல்லி திரிவார்கள். இதை கேட்ட பெற்றோருக்கு பிள்ளை மேல் அன்பா வரும்? குற்றம் செய்யாமல் தண்டனை கிடைக்கும் போது பெற்றோர் மீது பிள்ளைக்கு பாச பிணைப்பா வரும்?
<b>இந்த சமூகத்துக்கு பயந்த பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மீது அளவுக்கதிகமான கட்டுப்பாடுகளை விதிக்க முற்ப்படுகின்றனர். எந்த இளைஞனுக்கு தான் கட்டுப்பாடுகளுக்குள் வாழ பிடிக்கும்? எனவே இங்கே உரசல்கள் ஏற்ப்படுகின்றது. இந்த உரசல்களால், அவன் எதை செய்தாலும் குற்றம் கண்டு பிடிக்கும் இந்த சமூதாயம், இதனால் பிள்ளை மீது வெறுப்பு ஏற்படுகின்றது. இது எதனால்? இந்த சமூதாயத்தின் தவறான கண்னோட்டத்தால் தானே? பிரச்சினைகள் எங்கள் சமூதாயத்தின் மீது இருக்கும் போது பிள்ளைகள் மீதும் பெற்றோர் மீதும் வீணாக பழியை போடுவத மடமை என்பதை எதிரணியினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதை விடுத்து சும்மா வீம்புக்கு கதைப்பதில் அர்த்தமில்லை.</b><b>அடுத்து நாம் பிள்ளை பராமரிப்பு நிலையங்களை பரர்ப்போமானால்</b>, இங்கே என்ன பழக்க வழக்கங்கள் உருவாகின்றது? வீட்டிலே ஒரு காலாச்சாரத்தை பழகும் பிள்ளை அங்கு ஒரு பல் கலாச்சார சூழலில் எதை பழகும். இங்கு குழந்தைகள் வீட்டிலிருப்பதை விட பராமரிப்பு நிலையங்களில் தான் அதிகம் வளர்கின்றன. இந்த பரமரிப்பு நிலையம் என்கின்ற சூழல் பிள்ளைகளை பெற்றோரிடமிருந்து அன்னியப்படுத்தவே பயன் படுகின்றது. இந்த அன்னிய படுத்தலானது பிள்ளை வளரும் காலத்தில் பெரிய விரிசல்களாக மாறி மிக் பெரும் ஈடு செய்ய முடியாத இடைவெளியை ஏற்ப்படுத்துகின்றது என்றால் அது மிகையாகாது. அதை விட பாடசாலையில் ஆசிரியர்களால் பிள்ளைகள் பெற்றோரிடமிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றார்கள். கையில் சின்ன காயம் இருக்குமாயின் அப்பா அடிச்சாரா? அம்மா அடிச்சா? என்று கேட்டு கேட்டே நடக்காத விடையங்களை நடந்ததாக காவல் துறையில் செரல்லி பெற்றோரிடமிருந்து பிள்ளையை பிரிக்கின்றது இந்த புலம் பெயர் சூழல். ஒரு குழந்தை தவறி கீழே விழுமாக இருந்தால் உடனடியாக எந்த கருத்துக்களையும் பெற்றோரிடமிருந்து எதிர் பார்காமல் பிள்ளையை எடுத்து கொள்ளும் அதாவது நாகரீக வாதத்தில் அவை சட்டத்தினால் பாது காப்பதற்காக மீட்க்கப்படுகின்றனர். இப்படி எங்கள் சூழல் இருக்கையில் என்ன நடக்கும்? பிள்ளைக்கும் பெற்றோருக்கும் இடையே கொஞ்சல் குலாவலா நடக்கும்,?
எனவே நடுவர் அவர்களே! இதே சூழல் உங்களையும் பாதித்திருக்கலாம். இங்கிருக்கும் அனைவரையும் பாத்திருக்கலாம். முதலில் உன்னை திருத்து என்று சொல்ல பலர் எத்தனிக்கின்றனர் புரிகின்றது. ஆனால் இங்கே என் சமூகம் மாற வேண்டும் இல்லையேல் அது வரையில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கு் இடையே இருக்கும் நீண்ட தொரு இடைவெளி பெரிகிக் கொண்டே போகுமே தவிர அவை சுருங்கி சின்னதாக போவதில்லை. நான் சொல்லி முடித்தவை கொஞ்சம்..என் தோழர்கள் சொல்ல இருப்பது அதிகம்.....சூழலால் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே பிரச்சினைகள் ஏற்ப்பட்டு அது ஒரு பெரிய இடைவெளியை ஏற்ப்படுத்தி விட்டது என்று மீண்டும் ஆணித்தரமாக கூறி விடைபெறுகின்றேன்,
நன்றி, வணக்கம்

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by இளைஞன் - 03-31-2006, 12:29 AM
[No subject] - by sathiri - 04-01-2006, 04:32 PM
[No subject] - by இளைஞன் - 04-02-2006, 09:17 PM
[No subject] - by Thala - 04-02-2006, 11:05 PM
[No subject] - by இளைஞன் - 04-04-2006, 10:07 PM
[No subject] - by Nitharsan - 04-07-2006, 05:54 AM
[No subject] - by இளைஞன் - 04-15-2006, 07:11 PM
[No subject] - by RaMa - 04-17-2006, 11:29 AM
[No subject] - by இளைஞன் - 04-21-2006, 07:00 PM
[No subject] - by Sujeenthan - 04-24-2006, 08:23 PM
[No subject] - by இளைஞன் - 04-29-2006, 07:05 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)