04-07-2006, 02:52 AM
sathiri Wrote:அதைவிட ஒருமுறை இந்திய இராணுவ பெண்களின் பாலியல் வன்முறை பற்றி எழுதியபோது உங்களிற்கெல்லாம் வேறை வேலையில்லை யுத்தம் என்றால் அது எல்லாம் சாதாரணம் என்று பதில் எழுhதியவர் எனவேஇங்கு யுூட்டுடன் எனக்கு கருத்து மேதலை தொடர விருப்பம் இல்லை
சாத்திரி, உமது எழுத்தில் நேர்மை இல்லை. நான் இவ்வாறு இந்திய இராணுவம் பற்றி எழுதவில்லை. பொய் எழுதியிருக்கிறீர்கள்.
முதலில் புஸ்பராஜா பற்றியும், பஸ்தியாம்பிள்ளை பற்றியும் உமக்கு தெரிந்த உண்மையான வரலாற்றை ஏன் இன்னமும் நீர் இங்கே எழுதவில்லை? உண்மை என்றால் எழுத ஏன் தயக்கம்? எனக்கு தெரிந்த வரலாறு தவறு என்றால் உண்மையை எழுதி தெரிய வைக்க வேண்டியது தானே? நான் இந்திய இராணுவம் பற்றி எழுதாததை எழுதியதாக சொல்லி, அதனை சாட்டாக வைத்து கருத்து மோதலை தொடரவிருப்பமில்லை என்று நழுவிக்கொள்வது, தங்களது கருத்தின் உண்மைத்தன்மையையும், தங்களது நேர்மையையும் கேள்விக்கு உரியதாக்குகிறது.
<b>கான மயிலாட, கண்டிருந்த வான்கோழி
தானும் தன் பொல்லாச்சிறகை - விரித்தாடினாற்போல்
கல்லாதான் கற்ற கவி!</b>
உண்மையும் நேர்மையும் பண்பாளருக்கும் கற்றோருக்கும் அழகு. மற்றவர்களை பற்றி பொய்யும், புனைகதையும், அவதூறும் எழுதுவது பண்பற்றவர்களுக்கும் கல்லாதோருக்கும் வழக்கு.
<b> அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா றியன்ற தறம். </b>
- திருக்குறள்.
''
'' [.423]
'' [.423]

