04-07-2006, 02:41 AM
வர்ணன் Wrote:கவனிக்கபட வேண்டியது- தான் பிறந்த இனத்தையே - மட்டம் தட்டிய இந்த நபர் - இன விடுதலைக்கு உதவி செய்ய போகிறேன் என்று சொன்னது!
வர்ணன், எந்த நபரைப்பற்றி எழுதியிருக்கிறீர்கள்?
நான் எந்த இனத்தையும் தாழ்த்தி எழுதியதில்லை. தமிழில் ஒரு பழமொழி இருக்கிறது. <b> மருண்டவன் கண்களுக்கு இருண்டதெல்லாம் பேய்</b> என்று. தாழ்வுமனப்பான்மை எனும் உளநோயால் நீங்கள் பீடிக்கப்பட்டிருந்தால், யார் எதை சொன்னாலும் உங்களை தாழ்வாக சொல்வதாக தான் தெரியும். இனவிடுதலை ஒரு அடிமைப்பட்ட இனத்துக்கு தான் தேவை. எனது இனம் அடிமை இனமும் அல்ல. ஒரு வேளை நீங்கள் வேறு இனம், நான் வேறு இனமாக இருக்க கூடும்.
தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தமிழ் இனத்தின் போராட்டமாக பார்ப்பவர்கள் நிறையவே இருக்கிறார்கள். ஆனால் தமிழீழ தமிழர்கள், உலகத்தமிழினத்தில் ஒரு சிறிய பிரிவே ஆகும். உலகத்தமிழர்கள் அனைவரும் தமிழீழத்தை தமது நாடாக கருதவில்லை. ஆகவே தமிழீழ விடுதலைப்போர் தமிழரின் இனவிடுதலை போர் என கூறுவது எல்லாரும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. இலங்கையின் வடகிழக்கு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கான போராகவே நான் அதை பார்க்கிறேன். .
அதற்கு தான் நான் உதவி செய்ய விரும்பினேன்.
எனக்கும் களத்தில் உள்ள மற்றவர்களுக்கும் கருத்தொருமைப்பாடு இல்லாத நிலை உள்ளதனால் நான் அந்த முயற்சியை தொடரவிரும்பவில்லை.
உங்கள் இனவிடுதலைக்கு நான் உதவிசெய்ய முன்வரவும் இல்லை. என்னால் அதை செய்யவும் முடியாது. காரணம் உங்கள் இனஅடிமைநிலை உங்களது தாழ்வுமனப்பான்மையின் காரணமாக உருவான ஒரு தோற்றப்பாடு. அதற்கு உதவுமளவுக்கு எனக்கு அந்த துறைபற்றி அறிவு இல்லை.
''
'' [.423]
'' [.423]

