04-06-2006, 01:25 AM
Quote:கேள்வி: தமிழீழ காணி உரிமம் வழங்குதல் தொடர்பான நடவடிக்கை ஏதாவது முன்னெடுக்கப்படுகின்றதா?
பதில்: இது தொடர்பான உரிமம் வழங்குகின்ற நடவடிக்கைகளை தமிழீழ நிர்வாக சேவை காணிப்பகுதி செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. அவைகள் முதலில் குடியிருந்த காணிகளை வழங்குகின்ற போது தற்காலிக காணிப்பத்திரங்களையும் மீண்டும் அந்த காணிகள் தொடர்ந்தும் பயன்படுத்தி தொடர்ச்சியான பயன்பாட்டில் இருக்கும் காலப்பகுதியில் அதற்கான நிரந்தர அனுமதிகளை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை தமிழீழ நிர்வாக சேவையின் காணிப்பகுதியினர் செய்துள்ளனர்.
இங்கே குடியிருந்த காணிகள் எங்கிருந்து வரப் போகின்றன.. புலம்பெயர்ந்தவர்களால் விற்கமுடியாத காணிகள்.. அவர்கள் சந்ததியினரால் கவனிக்கமுடியாமல் போகும்பட்சத்திலும் வரலாமமில்லையா.. ஆக, ஒருநாள் புலத்திலும் ஏதாவது பிரச்சினைகள் தோன்றும்போது.. புகலிடத்தில் வாழும் சந்ததிகள் வேர்களற்ற அந்தரத்துக்குள் தள்ளப்படும் நிலை உருவாகாது என்பது என்ன நிச்சயம்?!
.

