Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில்
#16
இதே போல் ஒரு பிறர்துன்பத்தில் இன்பம் கொள்ளும் கொடூரமான செயல் ஆசிரியர் ஒருவரால் என்னிலும் நிகழ்த்தப்பட்டது. நான் 2ம் வகுப்பு படித்துகொண்டிருந்த நேரம்.... இடைவேளைக்கு பின்னர் இவரது பாடம் தொடங்கும். மாமரத்துக்கு கீழே சீமேந்தினால் வட்டமாக கட்டு(குளக்கட்டு போன்றது) அதிலே பெண் பிள்ளைகளை இருக்கவைப்பார். ஆண் பிள்ளைகள் சிலருக்குதான் கட்டில் இடம் இருக்கும் மீதிப்பேர் மண்ணில் இருக்க வேண்டும். பெண் பிள்ளைகள் பாடத்தில் ஏதும் பிழை விட்டால் அடிக்க மாட்டார் ஆண்கள் பிழை விட்டால் தாறுமாறாக அடி விழும்.
இந்த இம்சைகள் தாங்க முடியாமல் ஒரு நாள் இடைவேளை முடிந்த பின்னர் பாட்சாலையின் பின் பக்கதில் ஒழிந்துகொண்டேன். நான் இப்படி பதுங்கி இருக்கும் விடயத்தை எப்படியோ கேள்விப்பட்ட ஆசிரியர் இரண்டு பேரை அனுப்பினார் என்னை கூட்டி வரும் படி. நானும் போனேன். என்ன ஏது என்று கேட்கவில்லை. அடித்தான் எனக்கு. நானும் வாங்கிகொண்டு நின்றேன். பல அடிகள் விழுந்த பின்னர் என்னை கேட்டான் <span style='color:darkred'>நான் இவ்வளவு அடிக்கிறேன் நீ இன்னும் அழவில்லையா என்று. நானும் இந்த நாய் எவ்வளவு அடித்தாலும் அழக்கூடாது என்று மரம் மாதிரி நின்றேன். முடிவில் வென்றது அவன் தான். நான் முதலிலேயே அழுதிருந்தால் நான் வாங்கிய அடியில் ஐந்தில் ஒரு பங்குகூட வாங்கியிருக்க தேவையில்லை. அவன் அடித்தது நான் செய்த பிழைக்காக இல்லை நான் அழவேண்டும் என்பதற்காவே.

இந்த ஆசிரியரின் பெயர்..ம்ம்ம் இல்லை அரக்கனின் பெயர் நவரத்தினம் எலும்புக்கூட்டிற்கு தோல் போர்த்த மாதிரி முகம். மண்டையில் ஒரு முடி கிடையாது. யாழ்ப்பாணம் பாண்டியந்தாழ்வு அல்லது ஈச்சமோட்டையை சேர்ந்தவர். நான் வளர்ந்து பெரியவன் ஆன பிறகு இந்த அரக்கனுக்கு நல்ல பாடம் புகட்ட வேணும் என்று இருந்தேன் ஆனால் இச்சம்பவம் நடந்து ஐந்தாறு வருடங்களிலே நாய் செத்துபோட்டுது.

இன்று 25 வருடங்கள் கழிந்த பின்னரும் மனம் எவ்வளவோ பக்குவப்பட்டபின்னரும் இவனை யாராவது உயிர்பித்து தந்தால் இவனை நான் அடித்தே கொல்லுவேன். அந்த பிஞ்சு நெஞ்சில் எவ்வளவு விசத்தை ஊற்றிவிட்டு சென்றிருக்கிறான்.</span>
Reply


Messages In This Thread
[No subject] - by Vaanampaadi - 04-02-2006, 02:02 PM
[No subject] - by Danklas - 04-02-2006, 02:58 PM
[No subject] - by Birundan - 04-02-2006, 03:31 PM
[No subject] - by Danklas - 04-02-2006, 03:35 PM
[No subject] - by Jeeva - 04-02-2006, 03:54 PM
[No subject] - by Sujeenthan - 04-02-2006, 04:41 PM
[No subject] - by Mathuran - 04-02-2006, 04:46 PM
[No subject] - by தூயா - 04-04-2006, 09:04 AM
[No subject] - by sinnakuddy - 04-04-2006, 09:21 AM
[No subject] - by rock boy - 04-04-2006, 09:32 AM
[No subject] - by சுடர் - 04-05-2006, 01:18 AM
[No subject] - by கந்தப்பு - 04-05-2006, 02:19 AM
[No subject] - by saathuryan - 04-05-2006, 04:08 AM
[No subject] - by Vaanampaadi - 04-05-2006, 09:47 AM
[No subject] - by Thiyaham - 04-05-2006, 02:11 PM
[No subject] - by rock boy - 04-05-2006, 02:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)