04-05-2006, 09:47 AM
மாணவனுக்கு நட்ட ஈடு கொடுக்க நீதிமன்றம் உத்தரவு
[புதன்கிழமை, 5 ஏப்ரல் 2006, 15:00 ஈழம்] [கொழும்பு நிருபர்]
கொழும்பில் பாடசாலை மாணவன் ஒருவனை கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக பாதிக்கப்பட்ட மாணவனுக்கு மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று ஆசிரியருக்கு கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாணவனை கன்னத்தில் அறைந்து காயம் ஏற்படுத்தியதாக 2000 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் நாள் கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரி ஆசிரியர் லலித் பண்டார தென்னக்கோன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
சம்பவம் நடந்தபோது 17 வயது பாடசாலை மாணவன் தேர்வெழுத தாமதமாக வந்துள்ளார். இதனால் மாணவனை ஆசிரியர் தென்னக்கோன் அறைந்துள்ளார். இதில் மாணவனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இது தொடர்பாக மாணவனின் பெற்றோர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மாலினி ரணதுங்க, மாணவர் தனது கல்வியைத் தொடருவதற்காக மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை நட்ட ஈடாக ஆசிரியர் தென்னக்கோன் அளிக்க உத்தரவிட்டார்.
Puthinam

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>