04-05-2006, 06:48 AM
வானொலி1 நத்தார்தினத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தோடு சேர்ந்து தாயகத்துக்கு வருட வருடம் நிதி சேகரித்து வந்தது. நேரடி ஓளிபரப்பில் மக்கள் நன்கொடைகளினை அள்ளி அள்ளி வழங்குவார்கள். சென்ற நத்தாரின் போது வானொலி1 வழமைபோல தமிழர் புனர் வாழ்வுக்கழகத்தின் உதவியுடன் நிதி சேகரித்தது. வானொலி2, சிட்னிக் கத்தோலிக்க அமைப்போடு சேர்ந்து இதே திகதியில் வானொலி1க்குப்போட்டியாக தாயகத்துக்கு உதவ நிதி சேர்த்தது. வானொலி1, கத்தோலிக்க அமைப்பினை வேறு ஒருனால் மக்கள் குழப்பமடையமல் இருப்பதற்காக நிதி சேகரிக்குமாறு கேட்க, கத்தொலிக்க அமைப்பு ஈழத்தில் உள்ள கிழக்கு கத்தொழிக்க அமைப்பு ஒன்றுக்கு 'வானொலி1 தங்களினை நிதி சேகரிக்கத்தடையாக உள்ளது என்று கடிதம் எழுதி அனுப்பியது. அதன் பிரதியினை வானொலி1,வானொலி2, மற்றைய தமிழ் ஊடகங்களுக்கும் வழங்கியது. வானொலி2 தனது வழமையான செய்திகள் வாசிப்பதினை சிறு நிமிடங்களுக்கு பிற்போட்டுவிட்டு இப்பிரதியினை மிகமுக்கியவிடயமாகக் கருதில் கொண்டு வாசித்தது. இதனால் வானொலி1ல் மக்கள் கலந்து கொள்ளும் நேரடி ஒலிபரப்பில் பல மக்கள் வானொலி2க்கும், சிட்னி கத்தோலிக்க அமைப்பிற்கும் எதிராகக் கருத்தினைத்தெரிவித்தார்கள். மற்றைய ஊடகங்கள் இப்பிரதியினைக் கண்டுகொள்ளவில்லை.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

