04-05-2006, 06:17 AM
சிட்னியில் அண்மையில் சைவமகானாடு நடைபெற்றது. http://www.yarl.com/forum/viewtopic.php?t=9450 முருகன் கோவிலில் சைவமன்றம்தான் இவ்விழாவினை ஒழுங்கு செய்தார்கள். வானொலி2க்கு நேரடி ஓளிபரப்பினை வழங்கினார்கள். வானொலி1க்கு நேரடிஓளிபரபினை வழங்கவில்லை. வானொலி1ல் விளம்பரமும் செய்யவில்லை. இந்த மகானாட்டின் போது மகானாட்டு மலர் ஒன்றினை வெளியிட்டார்கள். பல அறிஞர்கள் நல்ல, நல்ல சைவக்கட்டுரைகள் எழுதினார்கள். கோவில் நிர்வாகத்தினைச்சேர்ந்த ஒருவர் எழுதிய கட்டுரையில் 'சைவசமயத்தினர் இப்பொழுது சைவம் எது என்று விளக்கமில்லாமல் மனிதர்களையும் கடவுளாக நினைத்துக்கும்பிடுகிறார்கள். அம்மனிதர்களில் சிலர் கொலை, கற்பழிப்பு வழக்கில் தண்டனை பெறுகிறார்கள்' என்று எழுதியிருந்தார். மேலும் 'தடக்குப்பட்டு விழுந்து கையினை முறித்துக் கொள்பவரையும் கடவுளாக நினைக்கிறார்கள். அவர் தன்னைப்பார்க்கவே வழியில்லை, இவரை மக்கள் கும்பிடுகிறார்கள்' என்றும் எழுத சிட்னியில் உள்ள சாய்பாபா சமித்தியில் உள்ள சிலர் கோவில் சைவமன்றத்துக்கு எதிராக விளக்கம் கேட்டனர். கோவில் திருவிழாவின் 10 நாட்களுக்கும் சிட்னித்தமிழர்கள் வாழும் பிரதேசங்கள்(suburb) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒவ்வொரு பிரதேசமக்கள் பணம் கொடுத்து சொந்தத்திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். இம்முறை இக்கட்டுரையினால் சில பாபா.பக்தர்கள் கோவில் திருவிழாவினையும், பணம் வழங்குவதினையும் புறக்கணித்தார்கள்.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

