04-05-2006, 05:42 AM
இறைவனுக்குத் தொண்டாற்றும் பக்தர்களுக்குப் போட்டி, பொறமை கூடாது. ஆனால் இக்கோவிலில் நிர்வாகத்தில் உள்ள சிலர்(கோவில் நாயன்மார்கள்) தங்களுக்குள் நான் பெரியவன்,பதவிப்போட்டிகள், தங்களுக்கு சார்பனவர்களுக்காக எடுக்கும் முடிவுகள் கவலைதரும் விடயங்களாக இருக்கிறது. ஆனால் நிர்வாகத்தில் உள்ள எல்லாரையும் குறைசொல்லக்கூடாது. சில நல்லவர்களும் இருக்கிறார்கள். அந்த நல்லவர்களில் ஒருவர், வன்னியில் தனது சொந்தப்பணத்தில் மிகப் பெறுமதியான வைத்திய உபகரணங்களினை வாங்கி தாயகத்துக்கு பங்களிப்புச் செய்து வருகிறார்.
வானொலி1 10வருடத்துக்கு முதல் சிட்னியில் ஆரம்பிக்கப்பட்டது. இதற்குப்போட்டியாக வானொலி2 3,4 வருடத்துக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு வானொலிகளும் தாயகத்துக்கு பங்களிப்பினைச் செய்கின்றன. வானொலி2 இனைவிட கிட்டத்தட்ட வானொலி1 க்கு 5,6 மடங்கு ரசிகர்கள் சிட்னியில் உள்ளனர். வானொலி2 நிர்வாகிகள் சிலரும் கோவில் நிர்வாகத்தில் உள்ளார்கள்.
சுனாமிக்கு முன்பு முருகன் கோவில் வெள்ளிக்கிழமைப்பூசைகள் வானொலி1ல் மட்டும் நேரடி ஒலிபரப்பு வந்தன. வருடாந்த மகோற்சவ பூசைகளும் ஒலிபரப்பு செய்யப்பட்டன. சிட்னியில் உள்ள வயோதிபர்கள் வீட்டில் இருந்தே பூஜைகளினை கேட்டு முருகப்பெருமானை வழிபட்டு வந்தார்கள். சுனாமிப்பிரச்சனைக்குப்பிறகு ஏற்பட்ட சம்பவத்தின் பிறகு கோவில் நிற்வாகத்தில் உள்ள வானொலி2 நிற்வாகிகளின் நிற்பந்தத்தினாலும், நாயன்மார்களில் சிலராலும் வானொலி1 வந்த நேரடி ஓலிபரப்பு நிற்பாட்டப்பட்டு, அவ்வொலிபரப்பு வானொலி2க்கு வழங்கப்பட்டது. இதனால் பல கோவிலுக்கு செல்ல முடியாத வயோதிபர்கள் முருகப்பெருமானின் பூஜையினைக்கேட்க முடியாமல் உள்ளார்கள். தற்பொழுது நடைபெறும் திருவிழாவின் நேரடி ஓளிபரப்பினை வானொலி2ல் மட்டுமே கேட்கலாம். வானொலி2, வானொலி1னை வெறுப்பு ஊட்டுவதற்காக் 'திருவிழாவினை ஒளிபரப்புச்செய்யும் ஒரே வானொலி வானொலி2' என்று அடிக்கடி அறிவிப்பினைச் செய்கிறார்கள். வானொலி1ல் மக்கள் கோவில் நாயன்மார்களின் முறைகேடுகள் பற்றி நேயர்கள் கலந்து கொள்ளும் நேரடி ஒலிபரப்பில் சொல்வார்கள். இன்னிகழ்ச்சியில் வானொலி2 நிர்வாகத்தினைச் சேர்ந்த ஒருவர், குரலினை மாற்றிக் தகாத வார்த்தைகளினாலும் கத்திக் குழப்பங்கள் ஏற்படுத்துவார்.

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.