04-04-2006, 10:07 PM
<b>"பெற்றோர்க்கும், பிள்ளைகளுக்கும் இடையில் தோன்றி விரிவடைந்துவரும் இடைவெளிக்குக் காரணம் பெற்றோரே" என உறுதிபட எடுத்துக்கூறிச் சென்றார் "பெற்றோரே" அணித் "தல" தல அவர்கள். </b>
தனது "தல" யை உருட்டிய எதிரணித் "தல" சாத்திரியின் "தல"ப்புரை வாதத்தை பார்த்து ரசித்ததாக குறிப்பிட்ட "தல" அவர்கள் அவரை தனது அணியினர் கவனித்துக்கொள்ள காத்திருப்பதாகக் கூறி நேரடியாக விடயத்துக்குள் நுழைந்தார். ("பிள்ளைகளே" அணித் தலைவர் சாத்திரி அவர்கள் "பாதுகாப்பு வலயம்" ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது நல்லதோ?)
இளையவர்களை அதாவது பிள்ளைகளை முகம் பார்க்கும் கண்ணாடியெனக் குறிப்பிட்டுள்ளார். கண்ணாடிக்கு முன்னால எதை காண்பிக்கிறீர்களோ அதைத்தான் கண்ணாடி பிரதிபலிக்கும் என்று அழகாக தனது வாதத்தை முன் வைத்தார். கண்ணாடிக்கு முன்னால் முள்ளை வைத்துவிட்டு ரோஜாவை காட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அப்படி எதிர்பார்த்தால் அதைப் போல முட்டாள் தனம் இருக்கமுடியுமா? பிள்ளைகளிடம் அன்பைக் காட்டி அன்பைப் பெறவேண்டும் - அரவணைப்பைக் காட்டி அரவணைப்பைப் பெறவேண்டும் என்று பெற்றோரைச் சாடினார். (பார்ப்போம் - தல விரைவில் பெற்றோர் நிலையை அடைந்ததும் எதைக்காட்டி எதைப் பெறுகிறார் என்று <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )
அழகான, அர்த்தமுள்ள பாடல் வரிகளை எடுத்துக்காட்டி பெற்றவரின் வளர்ப்பில் தான் எல்லாம் தங்கியிருக்கிறது என்று தனது அணியின் வாதப்பொருளுக்கு வலுச்சேர்த்தார். அன்பு, அரவணைப்பு என்கிற ஈர்ப்பு சக்தியால் பெற்றோர் தான் பிள்ளைகளை ஈர்த்து வைத்திருக்கவேண்டும். அவர்கள் அந்த ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்த தவறும்போது பிள்ளைகள் விலகிப் போகிறார்கள் - இடைவெளி உருவாகிறது - என சிறப்பாக எடுத்து சொன்னார்.
அடுத்ததாக பிள்ளைகளிடம் அன்பு செலுத்துதல் மட்டும் போதாது - அதனோடு புரிந்துணர்வும் இருக்கவேண்டும் என்றார். கால இடைவெளிகள் சிந்தனை வேறுபாட்டை உருவாக்குவது என்பது இயல்பு - அதனை உணர்ந்து பெற்றவர்கள் செயற்படுவதை விடுத்து - பிள்ளைகள் மீது தமது சிந்தனைகளையும், விருப்பங்களையும் திணிக்க வெளிக்கிடும் போது - பெற்றவருக்கும் பிள்ளைகளுக்குமிடையில் பெரிய ஓட்டை விழுகிறது என்பதை தெளிவாக சொன்னார்.
பெற்றோர்கள் தமது ஆசைகளை, தமது கனவுகளை, தமது எண்ணங்களை எல்லாம் பிள்ளைகளூடாக நிறைவேற்றிப் பார்க்க நினைக்கிறார்கள் - முனைகிறார்கள். பிள்ளைகளின் தனித்துவத்தை, அவர்களின் ஆசைகளை மதிக்கத் தவறிவிடுகிறார்கள் - இதனால் பிள்ளைகள் பெற்றவரிடம் இருந்து அன்னியப்படுத்தப்படுகிறார்கள் என்று கொந்தளிப்புடன் சொன்னார்.
அளவுக்கதிகமான கண்டிப்பு விரிசலை உண்டுபண்ணுமென்றார்.
பேசித் தீர்க்க வேண்டிய விடயங்களையெல்லாம் பெருசாக்கி பிள்ளைகளிடம் வெறுப்பை உண்டுபண்ணுகிறார்கள் என்றார்.
முதலாவதாக வந்த "பிள்ளைகளே" அணித்தலைவர் சினிமாவை எடுத்தால் - அடுத்த வந்த "பெற்றோரே" அணித் தலைவர் தொலைக்காட்சி்த் தொடர்களை கையிலெடுத்தார். பார்ப்போம் - "சூழலே" அணித்தலைவர் எதை கையிலெடுக்கிறார் என்று. (கத்தியை எடுக்காமல் இருந்தால் சரி)
பட்டினத்தாரின் பாடலையும் உதாரணம் காட்டினார். அதனை வைத்து தனது வாதத்துக்கு மேலும் வலுச்சோர்த்தார்.
மொத்தத்தில் தனது வாதத்தில் பிள்ளைகள் பக்கம் நியாயம் சேர்த்து, பெற்றோரை கடுமையாகச் சாடியுள்ளார்.
சரி அடுத்ததாக "இடைவெளி உருவாகி விரிவடைவதற்கு காரணம் சூழலே" என்று வாதாட வந்திருக்கும் அணித் தலைவர் "நிதர்சன்" அவர்களை களமேடைக்கு அழைக்கிறோம். வருபவர் நிதர்சனங்களை முன்வைப்பார் என்று நம்புவோம். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
தனது "தல" யை உருட்டிய எதிரணித் "தல" சாத்திரியின் "தல"ப்புரை வாதத்தை பார்த்து ரசித்ததாக குறிப்பிட்ட "தல" அவர்கள் அவரை தனது அணியினர் கவனித்துக்கொள்ள காத்திருப்பதாகக் கூறி நேரடியாக விடயத்துக்குள் நுழைந்தார். ("பிள்ளைகளே" அணித் தலைவர் சாத்திரி அவர்கள் "பாதுகாப்பு வலயம்" ஒன்றை ஏற்படுத்திக் கொள்வது நல்லதோ?)
இளையவர்களை அதாவது பிள்ளைகளை முகம் பார்க்கும் கண்ணாடியெனக் குறிப்பிட்டுள்ளார். கண்ணாடிக்கு முன்னால எதை காண்பிக்கிறீர்களோ அதைத்தான் கண்ணாடி பிரதிபலிக்கும் என்று அழகாக தனது வாதத்தை முன் வைத்தார். கண்ணாடிக்கு முன்னால் முள்ளை வைத்துவிட்டு ரோஜாவை காட்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அப்படி எதிர்பார்த்தால் அதைப் போல முட்டாள் தனம் இருக்கமுடியுமா? பிள்ளைகளிடம் அன்பைக் காட்டி அன்பைப் பெறவேண்டும் - அரவணைப்பைக் காட்டி அரவணைப்பைப் பெறவேண்டும் என்று பெற்றோரைச் சாடினார். (பார்ப்போம் - தல விரைவில் பெற்றோர் நிலையை அடைந்ததும் எதைக்காட்டி எதைப் பெறுகிறார் என்று <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> )அழகான, அர்த்தமுள்ள பாடல் வரிகளை எடுத்துக்காட்டி பெற்றவரின் வளர்ப்பில் தான் எல்லாம் தங்கியிருக்கிறது என்று தனது அணியின் வாதப்பொருளுக்கு வலுச்சேர்த்தார். அன்பு, அரவணைப்பு என்கிற ஈர்ப்பு சக்தியால் பெற்றோர் தான் பிள்ளைகளை ஈர்த்து வைத்திருக்கவேண்டும். அவர்கள் அந்த ஈர்ப்பு சக்தியை வெளிப்படுத்த தவறும்போது பிள்ளைகள் விலகிப் போகிறார்கள் - இடைவெளி உருவாகிறது - என சிறப்பாக எடுத்து சொன்னார்.