Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஒட்டுப்படைகள்-அரசின் மறுப்பு அடிப்படையற்றது-கக்ரப் கொக்லண்ட்
#2
<span style='font-size:25pt;line-height:100%'>துணை இராணுவக் குழுக்கள்: கண்காணிப்புக் குழு மீண்டும் கவலை </span>
சிறிலங்கா அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் துணை இராணுவக் குழுக்கள் இயங்குவது அமைதி முயற்சிகளை கடுமையாகச் சீர்குலைக்கும் என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மீண்டும் கவலை தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் ஹெலென் ஓலட்ஸ்டொட்டிர் கூறியதாவது:

வாழைச்சேனையில் கடந்த வாரம் கருணா குழுவினரை கண்காணிப்புக் குழுவினர் சந்தித்தனர். இதன்மூலம் எதுவித சந்தேகத்துக்கும் இடமின்றி அவர்கள் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கருணா குழுவினரை கண்காணிப்புக் குழுவினர் சந்தித்த போது 10 முதல் 15 வரையிலானோர் இருந்தனர். ரி௫6 ரக ஆயுதங்களை அவர்கள் வைத்திருந்தனர். கடந்த வாரம் வாழைச்சேனை பகுதி கிராமங்களை அவர்கள் சுற்றி வளைத்திருந்தனர்.

கருணா குழுவினர் அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இயங்குவதாக நாங்கள் முன்னர் தெரிவித்திருந்தமையையே இது உறுதிப்படுத்துவதாக உள்ளது.

அக்குழுவினரது அரசியல் அமைப்பாகக் கூறப்படுகிற தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்ற அமைப்பின் அலுவலகமும் பாடசாலை ஒன்றிற்கு அருகாமையில் அரசாங்காக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ள இந்த அலுவலகத்தை மூடுமாறு இராணுவ தளபதிக்கு பாடசாலை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது என்றார் அவர்.

இதனிடையே கருணா குழுவினர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், மட்டக்களப்பு அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் உள்ளிட்ட மூன்று புலிகளின் தளபதிகளுக்கு பகிரங்க கொலை அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

இந்த அச்சுறுத்தல் புதியது ஒன்றும் அல்ல என்றும் இதை சந்திக்க நாங்கள் தயார் என்றும் தயாமோகன் பதிலளித்துள்ளார்.

-புதினம்
! ?
'' .. ?
! ?.
Reply


Messages In This Thread
[No subject] - by கந்தப்பு - 04-04-2006, 01:09 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)