Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அடித்ததால் அழிந்து போன வாழ்க்கை
#1
அடித்ததால் அழிந்து போன வாழ்க்கை
எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் ஒரு பெண்மணி இட்லிகடை நடத்தி வந்தாள். அவரின் கணவர் முழு நேர குடிகாரன். அந்த பெண்மணிதான் குடும்பத்தை நடத்தி வந்தாள். அவளுக்கு பதினைந்து வயதில் ஒரு பெண் இருந்தது. பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தது.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை வேறு தாயாக இருந்தால் அதிகாலையில் எழுப்பி படிக்க சொல்வாள். அந்த பெண்மணியோ, மகளை ஐந்து மணிக்கு எழுப்பி வடைக்கு பருப்பும், மசாலாவும் உரலில் ஆட்ட வைத்து விடுவார். அது முடிந்ததும் கடலை சட்டினி அரைக்க வேண்டும். பாத்திரம் கழுவ வேண்டும் இப்படி ஒன்பது மணி வரை வேலை வாங்கி விட்டு அதன் பிறகுதான் விடுவாள். அந்த மாணவி அதன் பிறகு குளித்து ரெடியாகி பள்ளிக்கூடத்திற்கு ஓடுவாள்.

பத்தாம் வகுப்பு என்பதால் பள்ளிக்கூடத்தில் மிகவும் கண்டிப்புடன் பாடம் நடத்துவார்கள். வீட்டு பாடம், மாதிரி பரீட்சை வைப்பார்கள். வீட்டில் நிறைய வேலை என்பதால் அந்த மாணவியால் படிக்க முடியவில்லை.

ஆசிரியர்கள் ஒரு சிலர் அடித்து தண்டித்தார்கள். மற்ற மாணவிகள் முன்பு அவமானம் ஏற்பட்டது. அடியும் அவமானமும் தாங்க முடியாமல் தவித்தாள். வீட்டில் வேலை செய்ய மறுத்தால் அம்மாவிடம் அடி விழும். இந்த சூழ்நிலையில் அப்பெண் பள்ளிக்கூடம் போகிற மாதிரி புறப்பட்டு பள்ளிக்கூடம் போகாமல், எங்கேயாவது ஒளிந்திருந்து விட்டு மாலையானதும் வீடு திரும்பினாள்.

மாந்தோப்பு, ரெயில் ரோடு இப்படி எந்தெந்த இடத்திலேயÚÖ ஒளிய ஆரம்பித்தாள். அப்படி ஒளிந்திருக்கும் போது கவனித்த சில ஆண்கள், மிரட்டி அந்த மாணவியை தவறாக பயன்படுத்தி கொண்டார்கள். அதற்காக ஸ்வீட், பழங்கள் இப்படி வாங்கிக் கொடுத்து விடுவார்கள். பள்ளியில் அடி வாங்குவதைக் காட்டிலும் இது பரவாயில்லை என்று நினைத்தாளோ என்னவோ, அது தொடர்ந்து இருக்கிறது.

இப்படியே மாதங்கள் பல நகர்ந்த பிறகு அந்த மாணவியின் வயிறு பெரியதாக தெரிய ஆரம்பித்தது. வயிற்றில் கட்டி இருக்கும் என்று ஆஸ்பத்திரிக்கு அழைத்து போன பின்பு தான் தெரிந்தது வயிற்றில் வளர்வது குழந்தை என்று. அதற்கும் அந்த மாணவியை அம்மா அடித்தாள். கஷ்டப்பட்டு போன அந்த மாணவியின் வாழ்க்கை, தற்கொலையில் முடிந்து விட்டது.

- நா.பத்மாவதி,
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
அடித்ததால் அழிந்து போன வாழ்க்கை - by SUNDHAL - 04-03-2006, 05:00 PM
[No subject] - by SUNDHAL - 04-03-2006, 05:04 PM
[No subject] - by அருவி - 04-03-2006, 06:38 PM
[No subject] - by தூயா - 04-04-2006, 09:14 AM
[No subject] - by SUNDHAL - 04-04-2006, 12:03 PM
[No subject] - by Birundan - 04-05-2006, 12:37 AM
[No subject] - by SUNDHAL - 04-05-2006, 02:45 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)