Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அம்மாளாச்சியே எல்லாத்தையும் எனக்குத்தா
#32
நண்பரே !

கலைஞர் பற்றி நீங்கள் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன்.... அவரைப் பற்றி சில வரிகள்.....

கலைஞர் என்ற பெயரை நீக்கிவிட்டு அரை நூற்றாண்டு தமிழக அரசியலை யாரும் எழுதிவிடமுடியாது என்ற அளவிற்கு தமிழகத்தில் வியாபித்திருக்கிறார் கலைஞர். மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்து அயராத உழைப்பால் மிக உயர்ந்த பதவியை அடைந்தவர். முத்துவேலர்-அஞ்சுகம் அம்மாள் தம்பதியரின் மகனாக பிறந்த கருணாநிதி பொதுவாழ்வுக்கு வந்தபோது அவருக்கு வயது 14 தான். உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் "கலைஞர்" என்று அழைக்கப்படும் கருணாநிதி 1924 ஆம் ஆண்டு ஜ$ன் 3 ஆம் தேதி பிறந்தார்.
1936ல் திருவாரூர் உயர்நிலைப்பள்ளியில் மாணவ நேசன் கையெழுத்து பிரதியை நடத்தி அதன் ஆசிரியராகவும் கலைஞர் செயல்பட்டு வந்தார். 14 வயதில் கட்டாய இந்தி திணிப்பை எதிர்த்து மாணவர் பேரணியை நடத்தினார். 20 வயதில் திராவிடர் நடிகர் கழகம் என்ற மன்றத்தை தொடங்கி சீர்திருத்த நாடகங்களை அரங்கேற்றினார். நாடகங்களை கலைஞர் நடத்தி வந்த சமயத்தில் பெரியாருடன் தொடர்பு ஏற்பட்டது.

1946 ஆம் ஆண்டு திராவிடர் கழகத்திற்கு கொடி வடிவமைக்கப்பட்ட நேரத்தில் கருப்பு கொடியின் மத்தியில் சிவப்பு நிறத்திற்கு தனது ரத்தத்தை கலைஞர் தொட்டு வடிவமைத்தார்.

1949ல் சேலம் மாடர்ன் தியேட்டரில் சேர்ந்து கலைஞர் பணியாற்றிக் கொண்டிருந்த போது தி.க.விலிருந்து விலகி அண்ணா தலைமையிலான தி.மு.க.வில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். தி.மு.க. நடத்திய பல்வேறு போராட்டங்களில் முதல் வீரராக கலைஞர் நின்றார். 1957ல் நடந்த சட்டசபை தேர்தலில் குளித்தலை தொகுதியில் நின்று வெற்றிபெற்று முதன் முறையாக சட்டசபையில் காலடி எடுத்து வைத்தார்.

1960ல் தி.மு.க.வின் பொருளாளர் பதவி கருணாநிதியை தேடி வந்தது. 1962ல் சட்டசபை எதிர்கட்சித் தலைவர் 1967ல் அண்ணா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் என்று அடுத்தடுத்து பதவிகள் கலைஞர்டம் சேர்ந்தன. 1969ல் அண்ணா மறைந்த நேரத்தில் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வி எழுந்தது. அண்ணாவின் தம்பிதான் அடுத்த முதல்வர் என கலைஞரை பலரும் அடையாளம் காட்ட முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். 1971 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காமராஜரும் ராஜாஜியும் சேர்ந்து தி.மு.க.வை எதிர்த்தனர். ஆனால் அதனை முறியடித்து 184 இடங்களில் வெற்றி பெற்று கலைஞர் 2வது முறையாக ஆட்சியை பிடித்தார். 1983ல் இலங்கை தமிழர் பிரச்னைக்காக எம்.எல்.ஏ. பதவியை துறந்தார். தொடர்ந்து 1984ல் மேலவை உறுப்பினராக இருந்தார் தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி அ.தி.மு.க.வை உருவாக்கி ஆட்சியை பிடித்த போதும் கட்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் கலைஞர் வைத்திருந்தார். 13 ஆண்டு இடைவெளிக்கு பிறகு 1989ல் 3வது முறையாக கலைஞர் முதல்வர் ஆனார். 1991ல் நடந்த தேர்தலில் கலைஞர் மட்டுமே ஜெயித்த நிலையில் பீனிக்ஸ் பறவையாக எழுந்து 1996ல் 4வது முறையாக ஆட்சி கட்டிலில் கலைஞர் அமர்ந்தார். 2001ல் நடந்த தேர்தலில் தி.மு.க. தோல்வி அடைந்தாலும் சட்டமன்றத்தில் பிரதான எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

கை ரிக்ஷா ஒழிப்பு, மூக்கு கண்ணாடி திட்டம், பிச்சைகாரர் மறுவாழ்வு ஆகிய திட்டங்கள் கலைஞர்யால் உருவானது. சென்னையில் வள்ளுவர் கோட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை பூம்புகார் கலை கோட்டம். அண்ணா நினைவிடம் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை, அண்ணா அறிவாலயம் ஆகியவற்றை எழுப்பியவர்.

மிசா கொடுமை, எம்.ஜி.ஆர். வைகோ ஆகியோரால் கட்சியில் ஏற்பட்ட பிளவுகளை எதிர்கொண்டு போராளியைப்போல் கட்சியை கட்டிக்காத்தவர். 80 வயது தாண்டிக்கொண்டிருக்கும் இந்த வயதிலும் உடன்பிறப்புக்கு சளைக்காமல் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். நள்ளிரவில் புகுந்து கலைஞர் போலீஸ் இழுத்து கைது செய்த போது தமிழ் நெஞ்சங்கள் துடிதுடித்தன.

நள்ளிரவு 12 மணிக்கு மேல் தூங்க போனாலும் அதிகாலை 5 மணிக்கு எழுந்து அறிவாலயத்தில் நடைபயிற்சி செய்வது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அயராத உழைப்பால்தான் உயர்ந்த நிலைக்கு கலைஞர் வந்தார். அந்த உழைப்புக்கு இன்னுவரை சோம்பல் கிடையாது.

அரசியல் மட்டுமல்லாது இலக்கிய துறையிலும் கலைஞர் பங்கு மிகப்பெரியது. ரோமாபுரிப் பாண்டியன், தென்பாண்டி சிங்கம், நெஞ்சுக்கு நீதி, சங்கத் தமிழ். குறளோவியம், பொன்னர்-சங்கர், தொல்காப்பியபூங்கா என பல நூல்கள் படைத்திருக்கிறார். மணிமகுடம், ஒரே ரத்தம், தூக்கு மேடை, காகிதப்பூ என்று பல மேடை நாடகங்கள். இது மட்டுமல்லாது திரைத்துறையில் தனது நட்சித்தர முத்திரையை அழுத்தமாய் கலைஞர் பதித்து வைத்திருக்கிறார். கலைஞர்யின் எழுத்தாற்றலுக்கு பராசக்தி ஒன்று போதாதா? மந்திரி குமாரி, நீதிக்கு தண்டனை, பாலைவன ரோஜாக்கள், பாசப் பறவைகள் என அவர் தீட்டிய திரைப்படங்கள் பட்டியல் இன்னும் நீளும்.

இன்று வரை தோல்வியே காணாத சட்டசபை உறுப்பினர் கலைஞர் மட்டுமே. இந்தி எதிர்ப்பு போராட்டம், டால்மியாபுரம் பெயர்மாற்றப் போராட்டம், விலைவாசி உயர்வு எதிர்ப்பு போராட்டம், கல்லக்குடி போராட்டம், இலங்கைத் தமிழர் போராட்டம் என கருணாநிதியின் போராட்ட களங்கள் ஏராளம். போர்களங்கள் மாறிக் கொண்டிருந்தாலும் கருணாநிதியின் போர் குணம் மாறவில்லை.
,
......
Reply


Messages In This Thread
[No subject] - by I.V.Sasi - 03-29-2006, 04:14 PM
[No subject] - by putthan - 03-29-2006, 11:39 PM
[No subject] - by கந்தப்பு - 03-30-2006, 12:05 AM
[No subject] - by Birundan - 03-30-2006, 01:38 AM
[No subject] - by rajathiraja - 03-30-2006, 07:32 AM
[No subject] - by Luckyluke - 03-30-2006, 07:39 AM
[No subject] - by Luckyluke - 03-30-2006, 07:45 AM
[No subject] - by aswini2005 - 03-30-2006, 08:05 AM
[No subject] - by aswini2005 - 03-30-2006, 08:13 AM
[No subject] - by aswini2005 - 03-30-2006, 08:18 AM
[No subject] - by I.V.Sasi - 03-30-2006, 09:21 AM
[No subject] - by Jude - 03-30-2006, 11:23 AM
[No subject] - by Thala - 03-30-2006, 11:40 AM
[No subject] - by Luckyluke - 03-30-2006, 03:14 PM
[No subject] - by aathipan - 03-30-2006, 11:25 PM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 05:04 AM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 05:06 AM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 05:11 AM
[No subject] - by தூயா - 03-31-2006, 05:22 AM
[No subject] - by Luckyluke - 03-31-2006, 07:26 AM
[No subject] - by Luckyluke - 03-31-2006, 07:28 AM
[No subject] - by sathiri - 03-31-2006, 07:52 AM
[No subject] - by Luckyluke - 03-31-2006, 11:49 AM
[No subject] - by தூயவன் - 03-31-2006, 01:17 PM
[No subject] - by SUNDHAL - 03-31-2006, 03:32 PM
[No subject] - by Jude - 04-01-2006, 01:20 AM
[No subject] - by Jude - 04-01-2006, 01:35 AM
[No subject] - by aswini2005 - 04-01-2006, 08:32 PM
[No subject] - by தூயவன் - 04-02-2006, 04:53 AM
[No subject] - by Luckyluke - 04-03-2006, 11:22 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)