Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!!
#4
கருணா என்னும் மாயை! (பாகம் 4)



தமிழினம் காலத்திற்கு காலம் பல துரோகிகளை சந்தித்து வந்திருக்கிறது. அதில் சிலர் திறைமைசாலிகள் ஆகவும், ஓரளவு தனித்துவத்தோடு இயங்கக்கூடியவர்கள் ஆகவும் இருந்துள்ளார்கள். சிலர் வெறும் சாவி கொடுத்த பொம்மைகளாக மட்டும் இருந்துள்ளார்கள். இதில் கருணா இரண்டாவது ரகம்.

சில வருடங்களுக்கு முன்பு அரசியல்ரீதியாக தமிழர் விடுதலைக் கூட்டணியும், இராணுவரீதியாக மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்களும் தமிழினத்திற்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். யதார்த்தத்தை உணர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணி விடுதலைப்புலிகளின் தலைமையை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இணைந்து விட்டது. மாணிக்கதாசன், ராசிக் போன்றவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள். அந்த வகையில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு சிங்கள அரசு டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி, கருணா போன்றவர்களை பயன்படுத்திவருகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான அரசியல்ரீதியான செயற்பாடுகளுக்கு ஆனந்தசங்கரியை தலைமை ஏற்க செய்வதற்கு இந்திய அரசும், சிங்கள அரசும் முயன்றன. ஆனால் ஆனந்தசங்கரியோ அவரது உற்ற துணையாக இருந்த கதிர்காமர் கொல்லப்பட்ட பின்பு, செய்வது அறியாது தடுமாறி வருகிறார். தற்பொழுது ஆனந்தசங்கரி உல்லாசப் பயணங்கள் செய்தும் கடிதங்களை எழுதியும் பொழுதை போக்கி வருகிறார்.

டக்ளஸ் தேவானந்தா தமிழ் மக்களின் ஆதரவு என்பது துளி கூட இல்லாத ஒருவர் என்பது பல முறை அம்பலப்படுத்தப்பட்டு விட்டது. டக்ளஸ் தேவானந்தா எத்தனை அமைச்சர் பதவிகள் வகித்தாலும், அவரை மரபு கருதி சந்திக்கின்ற ராஜதந்திரிகள் கூட அவரது கருத்துக்களை கேட்பதோடு விட்டுவிடுகிறார்கள். அரசியல்ரீதியாக எதையும் சாதிக்க முடியாத டக்ளஸின் ஈபிடிபி யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இராணுவத்தின் துணைப்படையாக மட்டும் செயற்பட்டு வருகின்றது.

இவர்களில் தமிழின எதிரிகள் அதிகம் நம்பியது கருணாவையே. கருணா துரோகம் இழைத்த பொழுது மிகப் பெரிய ஒரு சக்தியாக சிங்கள அரசின் ஊடகங்களால் சித்தரிக்கப்பட்டார். அரசியல்ரீதியாகவும், இராணுவரீதியாகவும் விடுதலைப்புலிகளுக்கு சரியான சவாலாக கருணா இருப்பார் என்று சிறிலங்கா அரசு அக மகிழ்ந்திருந்தது. ஆனால் இன்று ராசிக்கின் இடத்தைக் கூட நிரப்ப முடியாத ஒரு நிலையிலேயே கருணா உள்ளார்.

ஈபிஆர்எல்எவ் இயக்கத்தில் இருந்து பின் தனித்து இயங்கிய ராசிக் கிழக்கில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுக்கு ஓரளவு சவாலாக விளங்கியவர் என்பது உண்மை. ராசிக் குழு சட்டப்படி சிறிலங்கா அரசின் துணைப்படையாக இணைக்கப்பட்டிருந்தது. ஆயினும் ராசிக் குழுவுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் இருந்தது. தமிழ் மக்களை துன்புறுத்துவதிலும், விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுப்பதிலும் ராசிக் குழு சிறிலங்கா இராணுவத்திற்கு பெரும் துணையாக செயற்பட்டு வந்தது. யுத்த காலத்தில் கூட ராசிக்குழுவால் சில புலனாய்வு வேலைகளில் ஈடுபட முடிந்தது. அது மட்டுமன்றி ராசிக் கிழக்கிலேயே வசித்து வந்தார். பலத்த பாதுகாப்போடு கிழக்கில் நடமாடிய ராசிக்கை நெருங்குவது விடுதலைப்புலிகளுக்கு மிகவும் கடினமாகவே இருந்தது. கடைசியில் ஒரு தற்கொலைத் தாக்குதல் மூலம் ராசிக் கொல்லப்பட்டார். ஒரு தமிழினத் துரோகியை அழிப்பதற்கு விடுதலைப்புலிகளால் தற்கொலைத் தாக்குதலை நடத்த வேண்டி வந்தது ராசிக் விடயத்தில் மட்டுமே.

ராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களோடு ஒப்பிடும் பொழுது விடுதலைப்புலிகளுக்கு கருணா ஒரு பொருட்டே அல்ல. தற்பொழுது ஈழத்தில் செயற்படும் துரோகக் குழுக்களில் மிகக் குறைந்த உறுப்பினர்களை கொண்டிருப்பது கருணா குழுவே. மற்றைய குழுக்களின் தலைமைகள் ஈழத்தில் இருந்து செயற்பட, கருணா மட்டும் இந்தியா, சிங்கப்பூர் என்று நாடு நாடுகளாக ஓடித் திரிகின்றார்.

இதில் ஒன்றை சரியாக புரிந்து கொள்ள வேண்டும். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தளபதிகளில் ஒருவரான கேணல் கருணா ராசிக், மாணிக்கதாசன் போன்றவர்களை விட திறமையானவர்தான். காரணம் அந்தக் கருணாவிற்கு தேசியத் தலைவரின் வழிகாட்டல் இருந்தது. ஆனால் ஓடிப் போன கருணா தற்பொழுது செய்துவரும் வேலையில் திறமைசாலி அல்ல. சுருங்கச் சொன்னால், நாங்கள் பெறுமதி மிக்க எதையும் இழக்கவும் இல்லை. எதிரிகள் பெறுமதி மிக்க எதையும் பெறுவும் இல்லை. கருணாவாற்தான் விடுதலைப்புலிகள் வெற்றிகளைக் குவித்தார்கள் என்பதும் மாயை. இன்று விடுதலைப்புலிகளுக்கு கருணா ஒரு அச்சுறுத்தலாக விளங்குகிறார் என்பதும் மாயை. அத்தோடு கிழக்கில் கருணாவிற்கு மக்களின் ஆதரவு உள்ளது என்று இருந்த மாயையும் நடந்து முடிந்து உள்ளுராட்சி தேர்தல் முடிவுகளால் அடிபட்டுப் போய்விட்டது.

கருணா ஒவ்வொரு நாடாக ஓடிக் கொண்டிருக்கு, அவருடைய குழு உயர்பாதுகாப்பு வலையங்களில் இருந்தபடி, சிங்கள இராணுவத்தின் கட்டளையை செயற்படுத்திக்கொண்டு இருக்கிறது. கருணா குழுவோடு ராசிக் குழு, ஈஎன்டிஎல்எவ் போன்ற குழுக்களும் இணைக்கப்பட்டுள்ளன. கருணா குழுவை ஒரு சக்தியாக காண்பிப்பதற்காக, சிறிலங்கா இராணுவம் கருணா குழுவினரை உள்ளடக்கியபடி சில தாக்குதல்களை விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வருகிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏப்ரல் 12 ஆம் திகதி கருணா கிழக்கை விட்டு முற்றாக விரட்டியடிக்கப்பட்டார். அதை நினைவுகூரும் விதமாகவும், கருணா குழுவின் இருப்பை காட்டும் விதமாகவும், சிறிலங்கா இராணுவம் வரும் வாரங்களில் மீண்டும் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்தும். இவைகளை வைத்து கருணா பற்றிய மாயையை கட்டிக்காக்க முனையும்.

ஆனால் உண்மையில் கருணா குழு என்பது தனித்து இயங்குவதற்கு வல்லமையை எவ்விதத்திலும் கொண்டிருக்கவில்லை. ஆட் பலமோ, ஆயுத பலமோ, மக்கள் ஆதரவு சிறிதளவு கூட இல்லாது ஒரு ரௌடிக் கும்பல்தான் கருணா குழு.

80களிலும் 90களிலும் துரோகக் கட்சிகள், இயக்கங்கள் என்று இருந்தவை இன்று குழுக்களாக சுருங்கி விட்டன. அன்று விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்டவர்களை விட இன்று இருக்கின்ற கருணா, டக்ளஸ் போன்றவர்கள் எல்லா விதத்திலும் பலவீனமானவர்கள். வெறும் சாவி கொடுக்கப்பட்ட பொம்மைகள். இந்த பொம்மைகளால் எந்தக் காலத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஒரு சவாலாக மாற முடியாது. இந்தப் பொம்மைகளை பற்றி வெறும் பிரம்மைகளே உருவாக்கப்பட்டுள்ளன. கட்டுக்கதைகள் மூலம் பலமானவர்களாக இவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களை சிறிது கூர்ந்து கவனித்தாலே இந்த மாயை உடைந்து விடும்.

1988ஆம் ஆண்டில் இந்திய இராணுவத்தின் கைக்கூலியாக வரதராஜப்பெருமாளும் பத்மநாபாவும் செயற்பட்டார்கள். துரோகிகளின் அன்றைய கதாநாயகாகள் அவர்கள்தான். அன்று அவர்கள் தமிழ் தேசியப் இராணுவம் என்னும் பெயரில் பிள்ளை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டார்கள். இன்றைய கதாநாயகனாகிய கருணா தமிழ் தேசியப் படை என்னும் பெயரில் பிள்ளை பிடிக்கும் வேலையை செய்கிறார். இன்று வரதராஜப்பெருமாள் சீண்டுவாரற்று அநாதையாக கிடக்கிறார். பத்மநாபா கொல்லப்பட்டு விட்டார். இவர்களைப் பற்றி தமிழ் மக்கள் யாரும் இப்பொழுது பேசுவதில்லை. சிறிது காலம் கழித்து கருணாவைப் பற்றியும் தமிழ் மக்கள் பேச மாட்டார்கள்.

முற்றும்


- வி.சபேசன்




(இக் கட்டுரைக்கு சில தகவல்களை தந்து உதவிய தமிழீழத்தில் வாழும் பெயர் குறிப்பிட முடியாத நண்பர்களுக்கு நன்றி)

¿ýÈ¢:www.webellam.com
[b]
Reply


Messages In This Thread
[No subject] - by I.V.Sasi - 03-29-2006, 03:59 PM
[No subject] - by I.V.Sasi - 03-29-2006, 04:03 PM
[No subject] - by I.V.Sasi - 04-02-2006, 09:40 PM
[No subject] - by I.V.Sasi - 04-02-2006, 10:09 PM
[No subject] - by Birundan - 04-02-2006, 10:40 PM
[No subject] - by கந்தப்பு - 04-03-2006, 03:43 AM
[No subject] - by I.V.Sasi - 04-03-2006, 10:15 AM
[No subject] - by கந்தப்பு - 04-19-2006, 05:09 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 09:56 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 09:58 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:00 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:09 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:12 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:14 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:16 AM
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:21 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:42 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:43 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:44 AM
[No subject] - by கந்தப்பு - 04-20-2006, 12:45 AM
[No subject] - by வர்ணன் - 04-20-2006, 03:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)